மீண்டும் இணையும் ‘ஈரம்’ பட வெற்றிக்கூட்டணி...ஆதி நடிக்கும் ‘சப்தம்’

நடிகர் ஆதி நடிக்கும் புதிய படமான ‘சப்தம்’ படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் மூலம் ‘ஈரம்’ பட கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 15, 2022, 04:03 PM IST
  • நடிகர் ஆதி நடிக்கும் 'சப்தம்'.
  • ஈரம் படத்தின் இயக்குனருடன் மீண்டும் இணையும் ஆதி.
மீண்டும் இணையும் ‘ஈரம்’ பட வெற்றிக்கூட்டணி...ஆதி நடிக்கும் ‘சப்தம்’ title=

ஆல்பா பிரேம்ஸ் இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்க, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” திரைப்படம் நேற்று அதாவது டிசம்பர் 14 ஆம் தேதி, 2022 எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. 

தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். திரில்லர் படங்களை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார். ஈரம் படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அறிவழகன் தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் இப்படத்தில் இணைகிறார். ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

மேலும் படிக்க | பதான் வெற்றிக்கு தேவி கோயிலில் ஷாருக் சிறப்பு வழிபாடு

ஈரம் படம் மூலம் மாபெரும் வெற்றியை தந்த அறிவழகன், ஆதி வெற்றிக் கூட்டணி இப்புதிய படத்தில் இணைகிறது. ஆல்பா பிரேம்ஸ் இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்கும் “சப்தம்” படத்தை திரைக்கதை எழுதி இயக்குகிறார் இயக்குநர் அறிவழகன். ஈரம் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், ரசிகர்களை உறைய வைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகவுள்ளது. 

சப்தம் படத்தின் பூஜை படக்குழுவினர் கலந்துகொள்ள, நேற்று (டிசம்பர் 14, 2022 ) இனிதே நடைபெற்றது. படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சூர்யா போனால் என்ன?... அடுத்த திட்டத்தை கையிலெடுத்த வணங்கான் பாலா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News