Rohit Sharma : மும்பை இந்தியன்ஸில் தக்க வைப்பது குறித்து பேச வந்த மார்க் பவுச்சர் - நோஸ்கட் செய்த ரோகித்

மும்பை இந்தியன்ஸ் அணியில் அடுத்த ஆண்டு தக்க வைப்பது குறித்து பயிற்சியாளர் மார்க் பவுச்சர் பேச வந்தபோது அவரை நோஸ்கட் செய்து அனுப்பியிருக்கிறார் ரோகித் சர்மா.

Written by - S.Karthikeyan | Last Updated : May 18, 2024, 06:08 PM IST
  • ரோகித்திடம் பேச வந்த மார்க் பவுச்சர்
  • முகம் கொடுக்காத ரோகித் சர்மா
  • மும்பையில் அடுத்த ஆண்டு விளையாடுவாரா?
Rohit Sharma : மும்பை இந்தியன்ஸில் தக்க வைப்பது குறித்து பேச வந்த மார்க் பவுச்சர் - நோஸ்கட் செய்த ரோகித்  title=

ஐபிஎல் 2024 தொடர் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்து பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகள் பிளே ஆஃப்  இடத்தை கன்பார்ம் செய்துவிட்ட நிலையில் நான்காவது இடத்துக்கான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு மோத இருக்கின்றன. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே பெற்று 10வது இடத்துடன் ஐபிஎல் 2024 தொடரை நிறைவு செய்திருக்கிறது.

மேலும் படிக்க | தோனி முதல் கோலி வரை! ஐபிஎல்லில் இவர்கள் அடிக்கும் ஒரு ரன்னின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்த ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியில் சலசலப்பு ஏற்படத் தொடங்கியது தான் அந்த அணியின் மோசமான ஆட்டத்துக்கு முக்கிய காரணம். அதாவது திடீரென கேப்டனை மும்பை இந்தியன்ஸ் மாற்றியது. ரோகித் சர்மா கேப்டனாக அந்த அணிக்கு சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் புதிய மாற்றம் என்ற பெயரில் மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக போட்டார். அப்போது தொடங்கிய பஞ்சாயத்து ஐபிஎல் முடியும் வரை பிரச்சனை முடியவில்லை. அணிக்குள் பிளவு ஏற்படத் தொடங்கியது. 

ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக திலக் வர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இருந்தனர். இஷான் கிஷனை தவிர மற்ற பிளேயர்கள் யாரும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக ஏற்றுக் கொண்டது மாதிரியே தெரியவில்லை. இதனால் மனதளவில் தர்ம சங்கடத்துக்கு ஆளான பாண்டியா கேப்டன்சியில் சில தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். முதல் ஓவரை எப்போதும் ஜஸ்பிரித் பும்ரா மும்பை அணிக்காக வீசிய நிலையில், அதனை இந்த ஆண்டு மாற்றி பார்த்தார் பாண்டியா. அது வொர்க் அவுட் ஆகவில்லை. பேட்டிங்கிலும் எதிர்பார்த்த அளவுக்கு யாரும் ஸ்கோர் செய்யவில்லை. ரோகித், சூர்யகுமார், இஷான் கிஷன் என யாரும் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. இதுவே அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது.

இந்த சூழலில் தான் அடுத்த ஆண்டு என்ன செய்யலாம் என்பது குறித்து ஐபிஎல் போட்டியில் தங்களது அணியின் கடைசி லீக் முடிந்தவுடன் மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் மார்க் பவுச்சர், ரோகித் சர்மாவிடம் சென்று பேசியுள்ளார். ஆனால், ரோகித் அவருடன் உரையாட தயாராக இல்லையாம். மிக சொற்ப வார்த்தைகளில் மட்டுமே இருவரின் உரையாடல் இருந்திருக்கிறது. இதனை பேட்டியில் மார்க் பவுச்சரே சொல்லிவிட்டார். அடுத்த ஐபிஎல் போட்டியில் என்ன செய்யலாம் என கேட்க பவுச்சர் சென்றபோது, நான் உலக கோப்பையில் கவனம் செலுத்த இருக்கிறேன் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அதன்பிறகு ரோகித் வேறு எதுவும் பேசவில்லையாம். அடுத்த ஐபிஎல் தொடருக்கு ரீட்டெயின் செய்வது குறித்து பவுச்சர் கேட்டதற்கு சைலண்டாகவும் இருந்துவிட்டாராம் ரோகித். இதனால் மூக்குடைந்த நிலையில் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் திரும்பிச் சென்றிருக்கிறார்.

மேலும் படிக்க | RCB vs CSK: இன்று பெங்களூருவில் மழை வருமா? சமீபத்திய வானிலை அறிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News