கண்ணம்மாவின் கோமாளி யார், புதிய ப்ரமோ வீடியோ வெளியீடு

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித ரோஷினி ஹரிப்ரியன் குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராக களமிறங்குகிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2022, 02:17 PM IST
கண்ணம்மாவின் கோமாளி யார், புதிய ப்ரமோ வீடியோ வெளியீடு title=

திரைப்படங்களை பார்க்க எந்தளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அதே அளவு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

தற்போது பல சேனல்கலும், பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை போட்டிபோட்டுக்கொண்டு ஒளிபரப்புகின்றன. அதிலும் குறிப்பாக 'குக் வித் கோமாளி' (Cook With Comali) என்கிற சமையல் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. ரக்சன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் (Chef Venkatesh Bhat) மற்றும் செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

ALSO READ | குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ

இந்த நிகழ்ச்சியின் சீசன்-1 ஆனது 16 நவம்பர் 2019 அன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் சமையல் போட்டியாளர்களாக ரேகா, உமா ரியாஸ்கான், வனிதா விஜயகுமார், பிரியங்கா ரோபோ சங்கர், ரம்யா பாண்டியன், மோகன் வைத்தியா, தாடி பாலாஜி, கு. ஞானசம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேசமயம் கோமாளிகளாக சிவாங்கி, புகழ், பிஜிலி ரமேஷ், மணிமேகலை, டைகர் தங்கதுரை, பாலா, சாய் சக்தி, பப்பு ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் பாகத்தில் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார்.

இந்த நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகமும் தொடங்கப்பட்டது. இரண்டாம் பாகத்தில் சமையல் போட்டியாளர்களாக அஸ்வின், பவித்ரா, கனி, தீபா, மதுரை முத்து, பாபா பாஸ்கர், தர்ஷா குப்தா, ஷகீலா ஆகியோர் கலந்து கொண்டனர். கோமாளியாக சிவாங்கி, புகழ், சுனிதா, மணிமேகலை, டைகர் தங்கதுரை, சரத், பாலா ஆகியோர் பங்கேற்றனர். இந்த சீசனில் கனி வெற்றி பெற்றார். அந்த நிலையில் தற்போது மூன்றாம் சீசனின் ஷூட்டிங் தொடங்கியது. இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் அவ்வபோது வெளியாகி வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி வரும் 22 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. போட்டியாளராக பல முக்கிய நட்சத்திரங்கள் பங்கு பெற உள்ளனர்.

இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித நடிகை ரோஷினி ஹரிப்ரியனும் (Roshni Haripriyan) இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இவரின் ப்ரோமோ வீடியோவில் வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ மூலம் அவருக்கு இந்த வார கோமாளியாக குரேஷி என்று தெரிய வந்துள்ளார். இந்த ப்ரோமோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

ALSO READ | குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கும் தேதி அறிவிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News