மே 31ஆம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள்... வருமான வரித்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை!

Income Tax Department: வருமான வரி செலுத்துவோர் பான் - ஆதாரை இணைப்பது குறித்து வருமான வரித்துறை மீண்டும் ஒரு எச்சரிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.அதுகுறித்து இதில் காணலாம். 

  • May 28, 2024, 22:08 PM IST

பான் - ஆதார் இணைப்பு (Pan - Aadhaar Link) வருமான வரித்துறையினரால் கட்டாயமாக்கப்பட்டது.


 

 

1 /8

பான் கார்டு மக்களிடையே அடையாள அட்டைகளுள் ஒன்றாக பார்க்கப்பட்டாலும், வருமான வரி போன்ற நிதி சார்ந்த பயன்பாடுகளுக்கு பான் கார்ட் மிக அவசியமானதாகும்.  

2 /8

குறிப்பாக இந்த பான் கார்டை, பயோமெட்ரிக் கொண்ட ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. தொடர்ந்து பான் - ஆதார் இணைப்பை வலியுறுத்தி தொடர் அறிவுறுத்தல்களும் வந்தன.   

3 /8

பான் - ஆதாரை குறிப்பிட்ட காலக்கெடுக்குள் இணைக்காதவர்களுக்கு பின்னர் அபாரதம் விதிக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து பான் - ஆதார் இணைப்பை மேற்கொள்ளாதவர்களும் இருக்கின்றனர் எனலாம். 

4 /8

இந்நிலையில், பான் - ஆதாரை இணைப்பது குறித்து வருமான வரித்துறை மீண்டும் ஒரு எச்சரிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.குறிப்பாக அதிக விகிதத்தில் வரி பிடித்தங்களை தவிர்க்க வரும் மே 31ஆம் தேதிக்குள் பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை நினைவூட்டல் ஒன்றை வழங்கியுள்ளது.   

5 /8

குறிப்பாக வருமான வரி விதிகளின்படி,பான் எண்ணை ஆதாருடன் இணைக்கத் தவறும்புட்சத்தில் பொருந்தக்கூடிய விகிதத்தில் இருமடங்கு டிடிஎஸ் (TDS) பிடித்தம் செய்யப்படும்.  

6 /8

மே 31 ஆம் தேதிக்குள் பான்-ஆதார் இணைப்பு முடிவடைந்தால், டி.டி.எஸ்-க்கான குறுகிய கழிப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று ஏப்ரல் மாதமும் வருமான வரித்துறை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.   

7 /8

இதனை தற்போது வலியுறுத்தும் வகையில், அதன் X பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளது. அதில்,"தயவுசெய்து மே 31ஆம் தேதிக்குள் உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவும். இல்லையெனில் அதிக வரி பிடித்தத்தை சந்திக்க நேரிடும்" என எச்சரிக்கை விடுத்துள்ளது.   

8 /8

மேலும் மற்றொரு நினைவூட்டலையும் வருமான வரித்துறை இன்று கொடுத்துள்ளது. அதாவது, SFT எனப்படும் குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகளின் அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் மே 31ஆம் தேதியாகும். எனவே, காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்தால் அபராதத்தை தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளது.