உருவாகிறது டிமான்டி காலனி இரண்டாம் பாகம்

டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து உறுதி செய்திருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 22, 2022, 07:10 PM IST
  • டிமான்டி காலனி இரண்டாம் பாகம் உருவாகிறது
  • படத்தை அஜய் ஞானமுத்துவின் இணை இயக்குநர் இயக்குகிறார்.
உருவாகிறது டிமான்டி காலனி இரண்டாம் பாகம் title=

அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டோர் நடித்த படம் டிமான்டி காலனி. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை மு.க. தமிழரசு தயாரித்திருந்தார்.

இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்த ஒரு படம் மூலம் அஜய் ஞானமுத்து அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள் படத்தையும், விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்தையும் இயக்கினார். 

இதற்கிடையே டிமான்டி காலனி படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருந்ததால் இதன் இரண்டாம் பாகம் எப்போது உருவாகுமென்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

Ajay

இந்நிலையில் படம் வெளியாகி 7 ஆண்டுகளுக்கு பிறகு படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை, டிமான்டி காலனி வெளியான மே 22ஆம் தேதியில் அறிவித்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க | மீண்டும் விஜய்யுடன் இணைவதை உறுதிப்படுத்திய யுவன் ஷங்கர் ராஜா!

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர் அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குநரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News