"காலா"-வுக்கு போட்டியாக களமிறங்கிய "தா தா 87" Teaser!

நடிகர் சாருஹாசன் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் "தா தா 87" திரைப்படத்தின் டீஸர் வெளியானது!

Last Updated : Mar 2, 2018, 10:30 AM IST
"காலா"-வுக்கு போட்டியாக களமிறங்கிய "தா தா 87" Teaser! title=

நடிகர் சாருஹாசன் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் "தா தா 87" திரைப்படத்தின் டீஸர் வெளியானது!

இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன் மற்றும் ஜனகராஜ் இணைந்து நடிக்கும் திரைப்படம் "தா தா 87". நடிகர் கமலஹாசன் சகோதரர் சாருஹாசன் முதன்மை கதாப்பாத்திரம் ஏற்க அவருடன் ஜனகராஜ் இப்படத்தில் களமிரங்குகிறார்.

நடிகர் ரஜினி-யின் காலா திரைப்பட டீஸர் தற்போது ரசிகர்களிடையே சக்கை போடு போட்டு வரும் நிலையில், தா தா 87 படத்தின் டீஸரும் நல்ல வரவினை பெற்றுள்ளது. காலா படத்தின் டீஸருக்கு முன்னரே இப்படத்தின் டீஸர் வெளியானபோதிலும், காலா பட டீஸருக்கு பின்னரே தா தா 87 திரைப்படத்தின் டீஸர் அனைவராலும் பிரபரல படுத்தப்பட்டு வருகிறது.

காரணம் இரண்டு படங்களும் Gangster கதையினை மையமாக கொண்டுள்ளது. நேற்று வெளியான இந்த டீஸரினை அனைவரும் வழக்கமான டீஸராகவே பார்த்தனர், ஆனால் தற்போது காலா டீஸர் வெளியாகி உள்ள நிலையில், இரண்டு படங்களையும் ஒப்பிட்டு இணையவாசிகள் மீம்ஸ்-களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த இரண்டு படங்களும் ரசிகர்களை அதிர வைத்துள்ளது என்பதில் எந்தவித சத்தேகமும் இல்லை!

Trending News