இணையத்தில் வைரலாகும் தனுஷின் இந்த புதிய லுக்

நடிகர் தனுஷின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Last Updated : Dec 17, 2019, 11:59 AM IST
இணையத்தில் வைரலாகும் தனுஷின் இந்த புதிய லுக் title=

நடிகர் தனுஷின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றபோதிலும், இந்தப் படத்துக்கு முன் வெளியான அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் சாதனை படைத்தது. மேலும் தனுஷ் நடிப்பில் அடுத்து பட்டாஸ் திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. 

இந்த படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது வேகமாக மதுரையில் நடைபெற்று வருகிறது. 

கேங்ஸ்டர் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தின் 3 படப்பிடிப்பு லண்டனை களமாக கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ல‌ட்சுமி நடிக்கிறார்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டன. தொடர்ந்து 70 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

நடிகர் தனுஷின் 44-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக தனுஷ் படத்தைத் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தில் மீதமுள்ள காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. அதற்கான படப்பிடிப்பு சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக தனுஷ் புதுக்கில் உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

Trending News