விமர்சகர்கள் தற்குறிகளா? சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த மிஷ்கின்

விமர்சகர்களை தற்குறிகள் என தான் கூறியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 24, 2022, 05:35 PM IST
  • இயக்குநர் மிஷ்கின் கொடுத்துள்ள விளக்கம்
  • யாரையும் தற்குறிகள் என விமர்சிக்கவில்லை
விமர்சகர்கள் தற்குறிகளா? சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த மிஷ்கின் title=

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். சித்திரம்பேசுதடி படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்த அவர், தன்னுடைய ஒவ்வொரு படங்களுக்கும் வித்தியாசமான கதைக்களத்தை அமைத்து அதனை வணிகரீதியாகவும் வெற்றி பெற வைத்தவர். மிஷ்கினின் கதைக்களத்தை ரசிப்பதற்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே படம் பெரும் வெற்றியை பெற்றது. நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு மற்றும் துப்பறிவாளன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது ஆண்டிரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கனவே டிரெய்லர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சில காட்சிகளில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருக்கிறார். இதனை இயக்குநர் மிஷ்கின் மற்றும் ஆண்டிரியா ஆகியோர் பொதுவெளியில் வெளிப்படையாக தெரிவித்த நிலையில், சென்சாரில் அந்தக் காட்சிகள் தூக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் படம் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த காட்சிகள் தூக்கப்பட்டதாக இயக்குநர் மிஷ்கின் விளக்கம் கொடுத்தார். இந்நிலையில், புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

பேட்டி ஒன்றில் விமர்சகர்களை தற்குறிகள் என விமர்சித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள இயக்குநர் மிஷ்கின், " என் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன். தலைப்பு சுவையாக இருக்க வேண்டுமென நான் சொன்னதை வேறு மாதிரி புரிந்து கொண்டு செய்தி போட்டிருக்கிறார்கள். நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. என் படத்தைப் பாருங்கள் படம் நன்றாக இருந்தால் பாராட்டுங்கள், படம் நன்றாக இல்லையெனில் கடுமையாக விமர்சியுங்கள். இப்போதல்ல என் முதல் படத்திலிருந்தே இதைச் சொல்கிறேன். விமர்சிப்பது அனைவரின் உரிமை, உரிமை மீறலை நான் என்றும் அனுமதிக்க மாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ஆர்யாவின் கேப்டன் - வெளியானது ட்ரெய்லர்... எகிறும் எதிர்பார்ப்பு

மேலும் படிக்க | இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News