மதுரவீரன் பற்றி விஜயகாந்த் பிரேமலதா என்ன கூறினார்- வீடியோ

ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள், அனைவருக்கும் மதுரவீரன் திரைப்படம் சமர்ப்பணம் என தேமுதிக மகளிர் அணி தலைவர் விஜயகாந்த் பிரேமலதா கூறியுள்ளார்.

Last Updated : Feb 4, 2018, 12:19 PM IST
மதுரவீரன் பற்றி விஜயகாந்த் பிரேமலதா என்ன கூறினார்- வீடியோ

ஜல்லிக்கட்டை மையமாக கொண்ட விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ‘மதுரவீரன்’. இந்தப் படத்தை பி.ஜி.முத்தையா இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

மீனாட்சி, சமுத்திரக்கனி, வேல. ராமமூர்த்தி, மைம் கோபி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், மாரிமுத்து, தேனப்பன் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். 

இந்த படத்தின் சிறப்பு காட்சியை தேமுதிக தலைவரும், படத்தின் நாயகன் சண்முகப்பாண்டியனின் தந்தையுமான விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பார்த்தனர்.

படம் பார்த்த பிறகு அவர்கள் கூறியதாவது,

மதுரவீரன் திரைப்படம் பார்த்து ரசித்தேன். இது ஒரு நல்ல படம். படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அதேபோல விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள், அனைவருக்கும் மதுரவீரன் திரைப்படம் சமர்ப்பணம். இது ஒரு வெற்றி படமாக அமைத்துள்ளது எனக் கூறினார்.

வீடியோ:

More Stories

Trending News