காஜல் அகர்வாலின் மனம்கவர் கள்வன் கெளதம் கிச்லுவின் காதல் கதை தெரியுமா?

நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. இரு மனங்கள் இணைந்து, திருமண பந்தத்தில் இணையவிருக்கும் நாளன்று, காஜல் அகர்வாலின் கணவனாக கைப்பிடிக்கவிருக்கும் கெளதம் கிச்லு யார் தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 29, 2020, 09:18 PM IST
காஜல் அகர்வாலின் மனம்கவர் கள்வன் கெளதம் கிச்லுவின் காதல் கதை தெரியுமா? title=

புதுடெல்லி: நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. இரு மனங்கள் இணைந்து, திருமண பந்தத்தில் இணையவிருக்கும் நாளன்று, காஜல் அகர்வாலின் கணவனாக கைப்பிடிக்கவிருக்கும் கெளதம் கிச்லு யார் தெரியுமா?
காஜல் அகர்வால் திருமணம் செய்து கொள்ளும் முடிவை அறிவித்தபோது, அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பல்வேறு பாலிவுட் மற்றும் தென்னிந்திய பிரபல நடிகர்களுடன் பணியாற்றிய நடிகை காஜல் திரைப்படத்துறையில் இல்லாத கெளதம் கிச்லுவை தனது வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்ததே அதிர்ச்சிக்கு காரணம். 

காஜலின் மனம்கவர் மணாளர் கெளதாம் கிச்லு யார்?
காஜலின் இதயம் கெளதமை நோக்கி ஈர்த்தது எப்படி என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்த்ள்ளது. 'க்யூ ஹோ கயா நா' என்ற இந்தி படத்தில் காஜல் அகர்வால் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இதன் பின்னர், தென்னிந்திய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களின் சூப்பர் ஸ்டார் ஆனார். ஆனால் மும்பையில் பிறந்து வளர்ந்த காஜல், இந்தி படங்களிலும் நடித்தார்.

பாலிவுட் மற்றும் தென்னிந்தியா திரைப்படங்களிலும் பணியாற்றி வருகிறார். 'மும்பை சாகா' மற்றும் 'இந்தியன் 2' என இரு இந்தி திரைப்படங்கள் தற்போது திரைக்கு வரவிருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் பணியாற்றப்போவதாகவும் காஜல் கூறியுள்ளார். 
முப்பத்தைந்து வயதான காஜல், உறவு உறுதிப்படுத்தப்படும் வரை, காதல் விஷயத்தை வெளியில் கிசுகிசு உருவாகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். கெளதம் மும்பையில் உள்ள வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தார்.
மும்பைக்குத் திரும்பிய பிறகு, Gautam Desern என்ற இண்டீரியர் டிசைனிங் நிறுவனத்தைத் தொடங்கினார். அவரது நிறுவனம், வீட்டிற்கான உள் அலங்காரங்கப் பொருட்களை தயாரிப்பது, உள் அலங்கார வேலைகளை செய்வது போன்ற பணிகளை செல்கிறது. உள்நாடு, வெளிநாடு என பல இடங்களுக்கும் சுற்றுலா செல்வது கெளதமுக்கு மிகவும் பிடித்தமானது.

தொடர்புடைய செய்தி | வாழ்க்கைத்துணையே எல்லாம் என்று அன்பால் கசிந்துருகும் காஜல் அகர்வால்…

காஜல் அகர்வால், தனது பால்ய கால சிநேகிதர்கொடுத்த விருந்து ஒன்றில் கெளதமை சந்தித்தார். தனது வாழ்க்கை துணை ஒருபோதும் திரைத்துறையை சார்ந்தவராக இருக்கக்கூடாது என்பதில் காஜல் உறுதியாக இருந்தார். முதலில் நண்பனாக அறிமுகமான கெளதம் காதலனாக மாறினார். 
காஜல் மற்றும் கெளதமின் சிந்தனைகள் மிகவும் ஒத்தவை. கெளதம் தனது வேலையில் மிகவும் தீவிரமானவர். காஜலும் தனது துறையில் ஆழ்ந்த அக்கறைக் கொண்டவர். தனது நடிப்புத் துறையே உயிர் மூச்சு என்று காஜல் அகர்வால் சொன்னால், அப்படியே ஆகட்டும் என்று கெளதம் சொல்லிவிட்டாராம். 
காஜல் -கெளதம் திருமணத்தில் அனைத்து சம்பிரதாயமான சடங்குகளும் நடைபெறும். ஆனால் மிகவும் குறைந்த விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு கொடுத்திருக்கிறார்கள். 
கோவிட் தொற்றுநோய் பாதிப்பு இருக்கும் சமயத்தில் திருமணம் நடத்தாமால் சற்று தள்ளிப் போட்டிருந்தால், பிற பிரபலங்கள் செய்வதைப் போல, ஆடம்பரமக திருமணம் செய்திருக்கலாம். அல்லது தற்போது பிரபலமாக இருக்கும் destination wedding கூட செய்திருக்கலாம்.  
ஆனால் காஜல் மற்றும் கெளதம் இருவருமே தங்கள் திருமணம் ஆடம்பரமாக நடைபெறத் தேவையில்லை, உற்றார் உறவினர் மத்தியில் மகிழ்ச்சியுடன் நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். நாளை தம்பதிகளாகும் காதலர்களுக்கு Wish you all the best!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News