சார்னு கூப்பிடாத அண்ணானு கூப்பிடு - ரசிகருக்கு அஜித் போட்ட அன்பு கட்டளை

தனது ரசிகருக்கு அஜித் போட்டிருக்கும் அன்பு கட்டளை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 13, 2022, 12:27 PM IST
  • துணிவு படம் பொங்கலுக்கு ரிலீஸ்
  • படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்
  • அஜித் ரசிகரின் பதிவு வைரல்
 சார்னு கூப்பிடாத அண்ணானு கூப்பிடு - ரசிகருக்கு அஜித் போட்ட அன்பு கட்டளை title=

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு ஹெச்.வினோத்துடன் துணிவு என்ற படத்தில் நடித்திருக்கிறார் அஜித். இவர்களது கூட்டணியில் வெளியான முதல் இரண்டு படங்களும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் சதுரங்க வேட்டை, தீரன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த வினோத்துக்கு என்னாச்சு என பலர் முணுமுணுக்க தொடங்கினார்கள். அதேசமயம் வலிமை படத்தில் பலரின் தலையீடு இருந்ததால் தான் நினைத்தபடி வினோத்தால் வலிமை படத்தை எடுக்க முடியவில்லை என கோலிவுட்டில் பேச்சு எழுந்தது. ஆனால் துணிவு படம் முழுக்க முழுக்க வினோத்தின் படமாகவே உருவாகியிருப்பதாகவும், வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாகவும்  கூறப்படுகிறது. க்ரைம் ஏரியாவில் வினோத் கில்லி என்பதால் துணிவு நிச்சயம் ஹிட்டடிக்கும் என்கின்றனர் ஏகே ரசிகர்கள்.

துணிவு பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதனால் படத்தின் ப்ரோமோஷனுக்கோ, படத்துக்கு தியேட்டர் கிடைப்பதிலோ எந்த சிக்கலும் இருக்காது என கருதப்படுகிறது. இதற்கிடையே அஜித்தை அவரது ரசிகர்கள் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அந்தப் புகைப்படங்கள் பலரது கவனத்தை ஈர்த்தன.

Thunivu

இந்நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தப் பதிவில், “ ஒரு நாள் ராப் சாங் படப்பிடிப்பின்போது நாங்க ஒரு நாலு பேரு ஓராம நின்னுட்டு இருந்தோம்.எங்கள் பாத்து ’ஏன் நின்னுட்டு இருக்கீங்க’ வேலை பாத்து டயர்டா இருப்பீங்க உட்காருங்கன்னு சொன்னாரு. அதுக்கு என் பக்கத்துல இருந்த பையன் பரவால சார்-னு சொன்னதுக்கு தல என்னா தெரியுமா சொன்னாரு ‘சார்-னு சொல்லாதடா அண்ணான்னு சொல்லுன்னு சொன்னாங்க” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தப் பதிவு வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | சிரிக்க தயாராகுங்க.... டிசம்பரில் திரைக்கு வருகிறார் ‘நாய் சேகர்’ வடிவேலு

மேலும் படிக்க | பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மஹேஸ்வரி; எவ்வளவு செட்டில்மெண்ட் ஆச்சி?

மேலும் படிக்க | அங்க போனா மாறிடுவாங்களோ - பிக்பாஸ் மணிகண்டன் குறித்து தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News