நடிகை ஸ்ரீதேவி மரணம் அடைந்ததையடுத்து, மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு பிரபலங்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
Actors Deepika Padukone and Ranveer Singh arrive at Anil Kapoor's residence in Mumbai. #Sridevi pic.twitter.com/GTlTSXJQqv
— ANI (@ANI) February 26, 2018
The saddest part was that she couldn't see her daughter (Jhanvi)'s debut film. My heart goes to entire family. I don't have much info about news of her drowning. I heard she fell into bathtub following a cardiac arrest. I am very sad: Shakti Kapoor #Sridevi pic.twitter.com/zxWKEJo2tN
— ANI (@ANI) February 26, 2018
Dubai Police has transferred the case to Dubai Public Prosecution, which will carry out regular legal procedures followed in such cases: Govt of Dubai Media Office #Sridevi
— ANI (@ANI) February 26, 2018
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகள் குஷி ஆகியோரிடம் துபாயில் அரசு தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருகின்றனர். இதனால் ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து துபாயில் அரசிடம் துபாயில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் பேச்சுவாரத்தை நடத்தி வருகின்றனர்.
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விசாரணை நடத்த துபாய் அரசு முடிவு செய்துள்ளது என தகவல் வந்துள்ளது
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகள் குஷி ஆகியோரிடம் துபாயில் அரசு தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனால் இன்றிரவு ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என துபாயில் இருந்து தகவல் வந்துள்ளது.
வெளிநாடுட்டில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் உயிருடன் இல்லை என்பதை பதிவு செய்யும் வகையிலான சட்ட நடவடிக்கைக்காக பாஸ்போர்ட் ரத்து செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் துபாயில் ஸ்ரீதேவி மரணமடைந்ததால் அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு பின்னர் தான் அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டு வர முடியும். அதற்கான முயற்சியில் துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம் ஈடுபட்டு வருகிறது.
Our embassy and consulate are working closely with local authorities to expedite the return of mortal remains of #Sridevi and also keeping Kapoor family apprised, it is our endeavor to send mortal remains at earliest: Indian Envoy to UAE Navdeep Suri to ANI (file pic) pic.twitter.com/kdHImTc04c
— ANI (@ANI) February 26, 2018
இன்று இரவுக்குள் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்க்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அவரது உடலை கொண்டுவர இந்தியாவில் இருந்து தனி விமானம் ஒன்று துபாய்க்கு அனுப்பபடுகிறது.
உடலை இன்று இரவு கொண்டு வந்தாலும், நாளை தான் தகனம் செய்யப்படும் என தகவல் வந்துள்ளது.
தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்!
துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஸ்ரீதேவி, திடீரென உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
நடிகை ஸ்ரீதேவி, அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகள் குஷி ஆகியோர், துபையில் நடந்த உறவினர் மோஹித் மார்வா இல்லத் திருமண விழாவுக்குச் சென்றிருந்தனர். இதுவே ஸ்ரீதேவி கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியாகம்.
திருமண நிகழ்ச்சி முடிந்து, ஹோட்டல் அறைக்குச் சென்ற ஸ்ரீதேவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. துபை நேரப்படி இரவு 11.30 மணியளவில் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் ஸ்ரீதேவின் இறுதிச்சடங்குகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மும்பை சாண்டாகுரூஸ் பகுதியில் இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் துபாயில் ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஸ்ரீதேவியின் மரணத்தில் குற்றவியல் நோக்கம் இல்லை என தடவியல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்ரீதேவி மது அருந்தியதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
Under the influence of alcohol, #Sridevi lost her balance, fell into the bathtub and drowned, reports UAE's Gulf News
— ANI (@ANI) February 26, 2018
#Update: #Sridevi's body has been released for embalming, reports Gulf News
— ANI (@ANI) February 26, 2018
#FLASH Forensic report says, #Sridevi died from accidental drowning (Source: UAE's Gulf News) pic.twitter.com/eWXdw1p1ZL
— ANI (@ANI) February 26, 2018