இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாகவும் LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் மிக குறைவாகவும் இருக்க வேண்டும். இந்நிலையில், இதய தமனிகளில் சேர்ந்து கோண்டு மாரடைபை ஏற்படுத்தும் கெட்ட கொல்ஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட சில இலைகளை பற்றி அறிந்து கொள்ளலாம். சோர்வு, கைகளில் உணர்வின்மை, கால்களில் வலி, மார்பு வலி, குமட்டல், பார்வை மங்குதல், சருமத்தில் கரும்புள்ளிகள் தோன்றுதல், கண்களில் வலி, கண்களைச் சுற்றியுள்ள தோல் மஞ்சள் நிறமாக இருப்பது ஆகியவை உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதற்கான முக்கிய அறிகுறிகளாகும்.
கொலஸ்ட்ரால் அளவு பிரச்சனைக்கு நமது மோசமான வாழ்க்கை முறையும், உணவு பழக்கமும் முக்கிய காரணம். இந்நிலையில், ஆரோக்கியமான டயட் மற்றும் வாழ்க்கை முறை மூலம், இயற்கை முறையில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த சில பச்சை இலைகள் உதவும். இந்நிலையில், இதய தமனிகளில் சேர்ந்து கோண்டு மாரடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொல்ஸ்ட்ராலை (Heart Health) எரிக்கும் ஆற்றல் கொண்ட சில இலைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
கொத்தமல்லி
கொத்தமல்லி தழை தினமும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. இது உணவின் சுவையையும் மணத்தையும் மேம்படுத்துவதோடு, ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையை குணப்படுத்தலாம். கொத்தமல்லி இலைகளை சாலட்டில் சேர்த்தும் அல்லது சட்னி செய்தும் சாப்பிடலாம்.
கறிவேப்பிலை
இரும்பு சத்து நிறைந்த கறிவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் எரிக்கும் ஆற்றல் கோண்டது. அதோடு, இதயத்திற்கு தேவையான நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உதவும். கறிவேப்பிலையின் நன்மைகளைப் பெற, தினமும் 8-10 இலைகளை சமையலில் பயன்படுத்தலாம். கறிவேப்பிலை சாறு தயாரித்து அருந்தலாம்.
வெந்தயக் கீரை
வெந்தய கீரையில் உள்ள மருத்துவ குணங்கள், உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உதவும். எனவே, கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு வெந்தய கீரையை அடிக்கடி உட்கொள்ளலாம்.
மேலும் படிக்க | பாராசிட்டமால் மாத்திரை அடிக்கடி சாப்பிடுவீர்களா.... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
துளசி இலைகள்
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் துளசி இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், இதில் உள்ள பண்புகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைக்கின்றன. இது உடல் எடை மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. துளசி இலைகளை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
நாவல் பழ இலைகள்
கொலஸ்ட்ராலைக் குறைக்க நாவல் பழ இலைகள் உங்களுக்கு சிறந்த வீட்டு வைத்தியமாக இருக்கும். இது ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அந்தோசயனின் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது இதய நரம்புகளில் சேர்ந்துள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. நாவல் பழ இலைகளை காய வைத்து தூள் செய்து, சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம். அல்லது கஷயாம் தயார் செய்து ஒரு நாளைக்கு 1-2 முறை குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | இரவில் படுக்கும் முன் 2 கிராம்பு போதும்... பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ