காஞ்சிபுரம் அருகே மாகரல் கிராமத்தில் ஆதரவற்ற மூதாட்டிக்கு தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகிகள் கட்டிக் கொடுத்த விலையில்லா வீட்டினை தமிழக வெற்றிக் கழக கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் வந்து பார்வையிட்டு பூஜை செய்து திறந்து வைத்தும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் கிராமத்தில் வசித்து வருபவர் மூதாட்டி எல்லம்மாள். ஆதரவற்ற இவர் குடியிருக்க வீடு இல்லாமல் மிகுந்த சிரமம் அடைந்து வந்துள்ளார். இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைமையின் உத்தரவின்படி ஒன்றிய செயலாளர் வினோத் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து மூதாட்டி எல்லம்மாளுக்கு புதிய கான்கிரீட் வீடு ஒன்றை கட்டி கொடுத்தனர்.
மேலும் படிக்க | விசிக-விலிருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்!! அதிரடி காட்டிய திருமா..
அதனையடுத்து இந்த புதிய வீட்டின் திறப்பு விழாவில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாகரல் கிராமத்திற்கு நேரில் வந்து தளபதி விலையில்லா வீடு திட்டம் எனும் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்த புதிய வீட்டை, ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றி பூஜை செய்து ஆதரவற்ற மூதாட்டி எல்லம்மாளிடம் அவ் வீட்டை ஒப்படைத்தார். மேலும் த.வெ.க கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் எஸ்பிகே. தென்னரசு மற்றும் நிர்வாகிகளும், தொண்டர்களும்,கிராம மக்களும் கலந்து கொண்டு வீட்டை கட்டிக் கொடுத்த ஒன்றிய நிர்வாகிகளுக்கு ஆரவார கோஷமிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரம், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை த.வெ.க.கட்சி பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வறுமையில் வாடும் கிராம மக்களுக்கு வழங்கினார். இதன் பின்பு தொண்டர்கள் மத்தியில் பேசிய தவெக கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும், அடுத்தபடியாக தொழிலை பார்க்க வேண்டும். அதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை தான் ஒரு சதவீதம், இரு சதவீதம், மக்களுக்கு செலவு செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி செலவு செய்ய கூடாது என்று சொல்லக்கூடிய தலைவன் தளபதி ஒருவர் மட்டும் தான்.
நம்முடைய இலக்கு, தமிழக வெற்றிக் கழகத்தினுடைய இலக்கு 2026 இல் தளபதியை அமர வைக்க வேண்டும் என்பது ஒன்று மட்டும் தான் அதற்கு நீங்கள் எல்லோரும் உழைக்க வேண்டும். மக்களோடு மக்களாக நீங்கள் மக்களுக்கு என்ன தேவை என்று அறிந்து சேவை செய்ய வேண்டும். பல்வேறு கட்சிகளிலிருந்து வரும் நண்பர்கள் எல்லாம் நாம் மதிக்க வேண்டும் அரவணைக்க வேண்டும் அவர்களோடு நாமும் நம்மோடு அவர்களும் செயல்பட வேண்டும். ஆனால் ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். தலைவர் தளபதி சொல்கிறதெல்லாம் யார் அன்று முதல் இன்று வரை சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டிய தொண்டருக்கு தான் பதவி வழங்கப்படும்.
யார் உழைத்தார்களோ அவர்களுக்கு மட்டும்தான் பதவி, உழைக்காதவர்கள் யாருக்கும் கட்சியில் பதவி கொடுக்கப்படாது. நமக்கு எல்லாமே தளபதி தான் தளபதியை தாண்டி வேறு எதுவும் கிடையாது. அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் புதிதாக வருவார்கள் எல்லாரும் சொல்லுவார்கள் யார் பேச்சையும் எதையும் கேட்காதீர்கள் உங்களுக்கு வேண்டியது தளபதி தலைவர் மட்டும்தான். என தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
மேலும் படிக்க | “நான் பலவீனமானவன் அல்ல..” விஜய் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ