எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (SP Balasubrahmanyam) சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது காலமானார். பல ரசிகர்கள், பிரபலங்கள், நண்பர்கள் மூத்த பாடகருக்கு சமூக ஊடகங்களில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பாடகருக்கு பாரத ரத்னா (Bharat Ratna) விருதை வழங்குமாறு ஒரு சிலர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் SPB பெயரிடப்பட்ட புதிய டப்பிங் ஸ்டுடியோவை திறக்க டப்பிங் யூனியன் முடிவு செய்துள்ளது.
பாடகரின் பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ பெயரிடப்படும் என்று டப்பிங் யூனியன் அறிவித்துள்ளது. டப்பிங் யூனியன் தலைவர் ராதா ரவி (Radha Ravi) தலைமையில் நடைபெற்ற உறுப்பினர்களின் கூட்டம், டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினரான எஸ்.பி.பியின் பெயரால் புதிய டப்பிங் ஸ்டுடியோவுக்கு பெயரிட முடிவு செய்துள்ளது. எஸ்.பி.பியை கௌரவிப்பதற்காக, எஸ்.பி.பியின் நினைவாக புதிய டப்பிங் ஸ்டுடியோ விரைவில் திறக்கப்படும் என்று டப்பிங் யூனியன் முடிவு செய்துள்ளதாக ராதா ரவி அறிவித்துள்ளார்.
ALSO READ | SPB-க்கு பாரத் ரத்னா வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் கடிதம்
டப்பிங் யூனியன் உறுப்பினர்கள் பாடகரை நினைவுகூரும் வகையில் எஸ்.பி.பியின் புகைப்படத்தையும் திறந்தனர். பாடகர்களுடன் ஏராளமான பிரபலங்கள் அவருடன் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியது மட்டுமல்லாமல், பல படங்களுக்கு நடித்து டப்பிங் செய்துள்ளார்.
ALSO READ | youtube சானல் நேரலை சந்திப்பில், வதந்திகளை பரப்புபவர்களை கிழித்த SP Charan... !!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR