தேர்வுக்கு லேட்டாக வந்த அமுதா, அனுமதிக்க மறுக்கும் ஆசிரியர்... அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலின் நேற்றைய எபிசோடில் வடிவேலு போட்ட டிராமாவால் வீட்டிற்கு வந்து அமுதா அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க...

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 6, 2023, 11:33 AM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
  • அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
தேர்வுக்கு லேட்டாக வந்த அமுதா, அனுமதிக்க மறுக்கும் ஆசிரியர்... அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்  title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வடிவேலு போட்ட டிராமாவால் வீட்டிற்கு வந்து அமுதா அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க...

எக்ஸாமுக்கு நேரமாகிவிட்டது என்று மணி அடிக்க அனைவரும் எக்ஸாம் எழுத போக அமுதா, மாணிக்கம் வேகமாக வருகின்றனர். அனைவரும் எக்ஸாம் தொடங்கி விட தாமதமாக வரும் அமுதாவை தடுத்து நிறுத்தும் ஆசிரியர் “எக்ஸாம் எழுத வர நேரம் முடிந்துவிட்டது” என்று சொல்லி அமுதாவை எக்ஸாம் எழுத விடாமல் தடுக்கிறார். 

இதை அனைத்தையும் எக்ஸாம் supervisor பார்த்துக் கொண்டிருக்க அவர் தன் கையை பின்னால் மறைத்து  தனது வாட்சில் நேரத்தை மாற்றி வைத்து “இன்னும் டைம் முடியல உங்க வாட்ச்ல டைம் தப்பா ஓடுது, இன்னும்  ஒரு நிமிஷம் இருக்கு இவங்கள உள்ள அனுமதிக்கலாம்” என்று சொல்லி அவர் அமுதாவை  எக்ஸாம் எழுத சொல்கிறார். அமுதா அவருக்கு நன்றி சொல்லிவிட்டு உள்ளே எக்ஸாம் எழுத போகிறாள். இங்கே உமா தனியாக அந்த டீச்சரிடம் “அமுதா exam எழுதட்டும் அவளை வேற வழியா நான் கவனிச்சுக்கிறேன்” என்று திட்டம் போடுகிறாள்.    

அடுத்ததாக அமுதா எக்ஸாம் எழுத அமர அப்போது அமுதா டைம் பார்க்க எக்ஸாம் எழுத வரும் டைம் முடிந்து இருக்கிறது. அமுதா எக்ஸாம் supervisor-ஐ பார்க்க அவர் எழுதுங்க என்று சொல்ல அமுதா எக்ஸாம் எழுதுகிறாள். இப்படியாக அமுதா எல்லா தேர்வுகளையும் எழுதுகிறாள்.

அடுத்ததாக அமுதா வீட்டில் அனைவருக்கும் காபி கொடுக்க அதை பார்த்த அன்னம் அமுதாவை அழைத்து அமர வைத்து சமாதானமாக பேசுகிறாள். அன்னம் அமுதாவிடம் “உன் மேலை எனக்கு கோபம் இல்ல இந்த வீட்டுக்கு நீ தேவைப்படுற” என்று சொல்ல அமுதா அமைதியாக இருக்கிறாள். பிறகு அன்னம் “நீ இந்த வீட்டு வேலையெல்லாம் செய்ற.. நீ ஸ்கூலுக்கு போகாம,. இந்த மாதிரி வீட்டை பார்த்துட்டு இருந்தா நல்லா தானே இருக்கும், செந்தில பாத்துக்கோ, குழந்தை பெத்துக்கோ.. நீ school போயிட்டா யாரு இதை எல்லாம் பாத்துப்பா.. நீ school போகாம வீட்டுலயே இரு” என்று சொல்கிறாள். அமுதா அனைத்துக்கு சரி என்று சொல்ல அன்னம் சந்தோசப்படுகிறாள். 

மேலும் படிக்க | சாதியை வைத்து வாய்ப்பு தருகிறாரா மாரி செல்வராஜ்..? அவரே கொடுத்த விளக்கம்..!

அதோடு இல்லாமல் அமுதா  “நீங்க சொல்ற மாதிரி எல்லாம் நான் செய்கிறேன் ஆனால் நான் படிக்கப் போவேன்” என்று சொல்ல அன்னம் ஷாக்காகிறாள். அன்னம் “நீ படிக்க போயிட்டா உன்னால இது எல்லாம் பண்ண முடியாது” என்று சொல்ல அமுதா ‘இல்ல அத்த என்னால ஒரு நல்ல மருமகளா இருந்துகிட்டே படிக்க முடியும்” என்று சொல்கிறாள்.

இதனை தொடர்ந்து செந்தில் அங்கே சின்ன பசங்களுக்கு டியூஷன் எடுத்துக் கொண்டிருக்க அங்கு வரும் அமுதா செந்தில் ஒரு ஃபார்முலாவை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அமுதா “அது தப்பான ஃபார்முலா...இந்த விஷயத்துக்கு வராது... நீங்க மாத்தி சொல்லி தரிங்க” என்று சொல்ல செந்தில் இதுதான் சரி என்று சொல்ல அமுதா தப்பு என்று சொல்ல இருவருக்கும் இடையே சின்னதாக சண்டை வருகிறது. இதையெல்லாம் பசங்க அனைவரும் பார்த்து கொண்டு இருக்க, செந்தில் அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான். 

திரும்பவும் செந்தில் இதுதான் சரி என்று சொல்ல அமுதா இல்லை என்று சொல்ல செந்தில் புத்தகத்தை எடுத்து செக் பண்ண, அமுதா “அந்த பார்முலா chemistry bookல இருக்கு நீ Physics புக்க எடுத்து பாத்துட்டு  இருக்க” என்று சொல்ல செந்தில் முறைத்துக் கொண்ட்டே புக்கை மாற்றி எடுத்து பார்க்கிறான். உடனே அமுதா “பேஜ் நம்பர் 57ல இருக்கு பார்” என்று சொல்ல செந்தில் அதைப் பார்த்து ஷாக் ஆகிறான். 

உடனே செந்தில் “நீ தெரிஞ்சுகிட்டே பசங்க முன்னாடி என்ன அவமானப் படுத்துற” என்று சொல்ல அமுதா “தப்ப தப்புன்னு சொல்றதுல என்ன தப்பு இருக்கு வாத்தியார் தப்பா சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று சொல்ல அப்பொழுது வடிவேல் அங்கே வந்து அமுதாவிடம் “நாளைக்கு ரிசல்ட் வரப்போகுது அப்ப தெரியும் இந்த அமுதா இங்க இருக்க போறாளா இல்ல, மெண்டல் ஹாஸ்பிடல் போக போறாளான்னு” என்று சொல்கிறான். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | தாராவுக்கு விழுந்த தர்ம அடி, நடந்தது என்ன? மாரி இன்றைய எபிசோட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News