வெளியானது ரஜினியின் தர்பார்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

ரஜனிகாந்தின் 167-வது திரைப்படமான தர்பார் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது.

Last Updated : Jan 9, 2020, 05:59 PM IST
வெளியானது ரஜினியின் தர்பார்! ரசிகர்கள் கொண்டாட்டம்! title=

ரஜனிகாந்தின் 167-வது திரைப்படமான தர்பார் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது.

ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வெளிவந்துள்ள படம் ‘தர்பார்’.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள இந்த படத்தை, லைகா புரொடக்‌‌ஷன்ஸ் சார்பில் பாஸ்கரன் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சுனில் ஷெட்டி, யோகி பாபு, ப்ரதீக் பார்பர், நிவேதா தாமஸ் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தர்பார் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்தையடுத்து நள்ளிரவு முதலே படம் வெளியாகும் திரையரங்கு முன் ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர். அதிகாலை 4 மணி முதல் படம் திரையிடப்பட்டது. திரையரங்கு முன் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சென்னையில் தர்பார் படத்தை காண லதா ரஜினிகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ் ரோகிணி திரையரங்கத்திற்கு வருகை தந்தனர்.

நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மும்பையில் உள்ள திரையரங்கிற்கு வெளியே பிரார்த்தனை செய்கிறார்கள், டிரம்ஸ் அடித்து, நடனமாடுகிறார்கள், பட்டாசுகளை வெடிக்கிறார்கள், இன்று வெளியான அவரது 'தர்பார்' படத்தைப் பார்க்க வருகிறார்கள்.

 

 

ரஜினிகாந்தின் 'தர்பார்' வெளியீட்டிற்கு முன்னதாக சென்னையில் உள்ள திரையரங்குகளுக்கு வெளியே ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்

 

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News