பிலிம்பேர் விருதுகள் 2022 - யார் யாருக்கு என்ன என்ன விருது? முழு விவரம்!

67வது பார்லே தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் 2022 நிகழ்ச்சியில் தமிழில் சிறந்த நடிகருக்கான மற்றும் நடிகைக்கான விருது சூர்யா மற்றும் லிஜோமோலுக்கு வழங்கப்பட்டது.  

Written by - RK Spark | Last Updated : Oct 10, 2022, 12:31 PM IST
  • பிலிம்பேர் விருதுகள் 2022 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  • தென்னிந்திய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
  • சூர்யாவிற்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.
பிலிம்பேர் விருதுகள் 2022 - யார் யாருக்கு என்ன என்ன விருது? முழு விவரம்! title=

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகின் மிகச்சிறந்த திரைப்படங்களைக் கொண்டாடும் வகையில் அக்டோபர் 9ஆம் தேதி பெங்களூரில்  67 வது தென்னிந்திய பார்லே ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2022 நடைபெற்றது.  பெங்களூருவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் திரைக்கு வந்த படங்களில் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.  பூஜா ஹெக்டே, மிருணால் தாக்கூர், கிருத்தி ஷெட்டி, சானியா ஐயப்பன் மற்றும் ஐந்திரிதா ரே ஆகியோரின் கண்கவர் நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.  இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியினை திக்நாத் மற்றும் ரமேஷ் அரவிந்த் ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்கினர்.  இப்போது வெற்றி பெற்றவர்களின் ,முழு பட்டியலை இங்கே காண்போம்.
 
1) தெலுங்கு திரையுலக வெற்றியாளர்கள் :

சிறந்த நடிகர் (ஆண்) - அல்லு அர்ஜுன் (புஷ்பா: தி ரைஸ்- 1)

சிறந்த நடிகை (பெண்) - சாய் பல்லவி (லவ் ஸ்டோரி)

சிறந்த திரைப்படம் - புஷ்பா: - பகுதி 1

சிறந்த இயக்குனர் - சுகுமார் பந்த்ரெட்டி (புஷ்பா: தி ரைஸ்- 1)

துணை வேடத்தில் சிறந்த நடிகர் (ஆண்) - முரளி ஷர்மா (அல வைகுந்தபுரமுலூ)

துணை வேடத்தில் சிறந்த நடிகை (பெண்) - தபு (அலா வைகுந்தபுரமுலூ) 

சிறந்த பாடல் - சீதாராமன் பாடல்- லைஃப் ஆஃப் ராம் 

சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) - சித் ஸ்ரீராம் - ஸ்ரீவல்லி (புஷ்பா- 1)

சிறந்த பின்னணி பாடகி (பெண்) - இந்திராவதி சௌஹான் - ஓஓ ஆண்டவா (புஷ்பா: தி ரைஸ்- 1)

சிறந்த நடனக் கலை - சேகர் மாஸ்டர் - ராமுலூ ரமுலா (ஆலா வைகுந்தப்புரமுலூ) 

சிறந்த ஒளிப்பதிவு - மிரோஸ்லா குபா ப்ரோசெக் (ப்ஷ்பா: தி ரைஸ் - 1)

சிறந்த அறிமுக ஆண் நடிகர் -பஞ்ச வைஷ்ணவ் தேஜ் (உபெண்ணா)

சிறந்த அறிமுக பெண் நடிகர் - க்ரித்தி ஷெட்டி (உபெண்ணா)

மேலும் படிக்க | 'ஆயிரத்தில் ஒருவன்' படம் பற்றி அதிர்ச்சியான உண்மையை வெளியிட்ட செல்வராகவன்!

2) தமிழ் திரையுலக வெற்றியாளர்கள் :

சிறந்த நடிகர் (ஆண்) - சூர்யா (சூரரைப் போற்று)

சிறந்த நடிகர் (பெண்) - லிஜோமோல் ஜோஸ் (ஜெய் பீம்)

சிறந்த படம் - ஜெய் பீம் 

சிறந்த இயக்குனர் - சுதா கொங்கரா 

சிறந்த துணை நடிகர் (ஆண்) - பசுபதி (சர்ப்பாட்டா பரம்பரை) 

சிறந்த துணை நடிகர் (பெண்) - ஊர்வசி (சூரரைப் போற்று)

சிறந்த இசை ஆல்பம் - ஜி.வி. பிரகாஷ் குமார் (சூரரைப் போற்று)

சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) - கிறிஸ்டின் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா- ஆகாசம் (சூரரைப் போற்று) 

சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்) - தீ (காட்டு பயலே-சூரரை போற்று) 

சிறந்த நடன கலைஞர் - தினேஷ் குமார் - வாத்தி கம்மிங் (மாஸ்டர்) 

சிறந்த ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி (சூரரைப் போற்று)

 

3) கன்னட திரையுலக வெற்றியாளர்கள் :

சிறந்த நடிகர் (ஆண்) - தனஞ்சய் (படவா ராஸ்கல்) 

சிறந்த நடிகர் (பெண்) - யாக்னா ஷெட்டி (படவா ராஸ்கல்)

சிறந்த படம் - சட்டம் 1978

சிறந்த இயக்குனர் - ராஜ் பி ஷெட்டி (கருட கமன விருஷப வாகனம்) 

சிறந்த துணை நடிகர் (ஆண்) - பி. சுரேஷா (சட்டம் 1978) 

சிறந்த துணை நடிகர் (பெண்) - உமாஸ்ரீ (ரத்னம் பிரபஞ்சா)

சிறந்த இசை ஆல்பம் - வாசுகி வைபவ் (படவா ராஸ்கல்)

சிறந்த பாடல் வரிகள் - ஜெயந்த் கைக்கினி -தெலடு முகில் (சட்டம் 1978)

சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) - ரகு திக்ஷித்

சிறந்த ஒளிப்பதிவு - ஷ்ரீஷா குடுவள்ளி (ரத்னன் பிரபஞ்சா)

சிறந்த நடனக் கலை - ஜானி மாஸ்டர் (யுவரத்னா)

வாழ்நாள் சாதனையாளர் விருது - புனீத் ராஜ்குமார் 

மேலும் படிக்க | நான் இந்து அல்ல ஆனால்... ராஜமௌலியின் புதிய விளக்கம்

4) மலையாள திரையுலக வெற்றியாளர்கள் :

சிறந்த நடிகர் (ஆண்) - பிஜு மேனன் (ஐயப்பனும் கோஷியும்)

சிறந்த நடிகர் (பெண்) - நிமிஷா சஜயன் (தி கிரேட் இந்தியன் கிச்சன்)

சிறந்த திரைப்படம் - ஐயப்பனும் கோஷியும்

சிறந்த இயக்குனர் - சென்னா ஹெக்டே (திங்கலச்ச நிச்சயம்) 

சிறந்த துணை நடிகர் (ஆண்) - ஜோஜு ஜார்ஜ் (நயாட்டு) 

சிறந்த துணை நடிகர் (பெண்) - கௌரி நந்தா (ஐயப்பனும் கோஷியும்) 

சிறந்த மியூசிக் ஆல்பம் - எம்.ஜெயச்சந்திரன் (சுஃபியும் சுஜாதையும்) 

சிறந்த பாடல் வரிகள் - ரஃபீக் அகமது - அரியதாரியத்தே (அய்யப்பனும் கோஷியும்)

சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) - ஷாபாஸ் அமன் - ஆகாஷாமையவளே (வெல்லம்)

சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்) - கே.எஸ்.சித்ரா-தீரமே (மாலிக்)

மேலும் படிக்க | நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் - விக்னேஷ் சிவன் போட்ட பதிவு... திணறும் சோஷியல் மீடியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News