தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட தயாரிப்பாளர்! வாரிசு வெளியாவதில் சிக்கல்!

'வாரிசு' படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Nov 13, 2022, 03:14 PM IST
  • வாரிசு படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.
  • தெலுங்கில் வாரசுடு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
  • சமீபத்தில் வெளியான முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட தயாரிப்பாளர்! வாரிசு வெளியாவதில் சிக்கல்!  title=

தெலுங்கில் 'வாரிசு' படம் வெளியாவதில் அப்படத்தின் தயாரிப்பாளராலேயே தற்போது பிரச்சனை வந்திருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியாகவிருக்கிறது வாரிசு படம்..  வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் தமிழில் வாரிசு என்றும் தெலுங்கில் வாரசுடு என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இந்த படம் வெளியாகும் அதே தினத்தில் தெலுங்கு திரையுலகின் சில முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் வாரிசு படத்திற்கு வசூல் பாதிக்கப்படும் என்று தயாரிப்பாளர் வருத்தத்தில் இருந்துவந்த நிலையில் தற்போது அவரை மேலும் கவலையடைய செய்யும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மேலும் படிக்க | பரோல் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

அதாவது கடந்த 2019ம் ஆண்டு தயாரிப்பாளர்கள் கவவுன்சில் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு பொங்கல் மற்றும் தசரா பண்டிகையின்போது அதிகளவில் டப்பிங் செய்யப்பட்ட படங்களுக்கே திரையரங்குகள் ஒதுக்கப்படுகிறது, நேரடி தெலுங்கு படத்திற்கு டப்பிங் படங்களை விட கம்மியான அளவில் தான் திரையரங்குகள் ஒதுக்கப்படுகிறது.  தெலுங்கு சினிமாவை நிலைநிறுத்த வேண்டுமானால் இனிமேல் நேரடி தெலுங்கு படங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுத்து திரையரங்குகளை அதிகமாக ஒதுக்கவேண்டும் என்றும் மிச்சம் இருக்கும் திரையரங்குகளை டப்பிங் படங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

 

தனக்கு தானே சூனியம் வைத்தது போன்று 2019ல் தில் ராஜு பேசியது இப்போது அவருக்கே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், டப்பிங் படங்கள் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதை சுட்டிக்காட்டி பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்கவேண்டும் என்றும் டப்பிங் படங்களுக்கு மிச்சமிருக்கும் திரையரங்குகளை ஒதுக்கினால் போதும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளது.  'வாரிசு' படம் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் உருவான படம், இதனை இயக்குனர் வம்சி ஒரு பேட்டியில் கூட தெரிவித்திருந்தார், இதனால் தெலுங்கி டப்பிங் செய்து வெளியாகப்போகும் வாரிசு படத்திற்கு குறைவான திரையரங்குகளே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.  மேலும் வாரிசு படம் வெளியாகும் அதே தினத்தில் 'வீர சிம்ம ரெட்டி' மற்றும் 'வால்டர் வீரய்யா' போன்ற நேரடி தெலுங்கு படங்கள் வெளியாகப்போவதால், வாரிசு படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

மேலும் படிக்க | பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மஹேஸ்வரி; எவ்வளவு செட்டில்மெண்ட் ஆச்சி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News