என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக இட்ஸ் பிரசாந்த்: டீஸர் உள்ளே!

பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் பிரசாந்த் நடித்துள்ள கணபதி ஐயர் திரைப்படத்தின் டீசர்  வெளியாகியுள்ளது.

Updated: Dec 7, 2019, 04:03 PM IST
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக இட்ஸ் பிரசாந்த்: டீஸர் உள்ளே!

பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் பிரசாந்த் நடித்துள்ள கணபதி ஐயர் திரைப்படத்தின் டீசர்  வெளியாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் குமார், ராதா கிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் நடித்த ‘குப்பத்து ராஜா’ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவரான சிராஜ், தற்போது ‘கணபதி ஐயர்’ என்ற நகைச்சுவை குறும்படம் ஒன்றை எழுதி இயக்கியிருக்கிறார்.

ராஜ் கே.சோழன் இசையமைக்கும் இந்தக் குறும்படத்துக்கு அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வெங்கட் ராஜ் படத்தொகுப்பை கவனிக்க, ஏ.ஜெயகுமார் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். இந்த படத்தில் யுடியூபில் விமர்சனம் செய்து நெட்டிசன்களிடம் பிரபலமான பிரசாந்த் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

இதில் பிரசாந்த் என்கவுண்டர் செய்யும் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.