குக் வித் கோமாளியில் ஜிபி முத்து! சமையல் எப்படி இருக்கப்போகுதோ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் வெளியேறிய ஜிபி முத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 6, 2023, 06:24 PM IST

Trending Photos

குக் வித் கோமாளியில் ஜிபி முத்து! சமையல் எப்படி இருக்கப்போகுதோ? title=

விஜய் டிவியில் விரைவில் குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்க இருக்கிறது. அதற்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ள நிலையில், அது படு வைரலாகியுள்ளது. காரணம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் வீட்டை விட்டு வெளியேறிய ஜிபி முத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். ஆனால், அவர் போட்டியாளரா? இல்லை கோமாளியா? என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தென்னிந்தியாவை இணைக்கிறாரா ரஜினி... ஜெயிலரில் மற்றொரு சூப்பர் ஸ்டார்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விக்ரமன், ஷிவின் மற்றும் ஆசீம், ரச்சிதா, மைனா உள்ளிட்டோர் இன்னும் வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இவர்களுடன் போட்டியாளராக சென்றவர் தான் ஜிபி முத்து. ஆனால், அவர் கொஞ்ச நாட்களுக்குமேல் வீட்டில் தாக்குப்பிடிக்க முடியவில்லை, பையன் மற்றும் குடும்ப ஞாபகமாக இருப்பதாக கூறி அழுது கொண்டே இருந்தார். ஆனால், அவரை பிக்பாஸ் குழுவினர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் பலனளிக்கவில்லை. அவர் வீட்டை விட்டு வெளியேறுவதில் உறுதியாக இருந்தார். இதனை கருத்தில் கொண்ட பிக்பாஸ் ஜிபி முத்துவை வீட்டில் இருந்து வெளியேற்றினர். 

வீட்டிற்கு வெளியே வந்தவுடன் வழக்கம்போல் பிஸியான ஜிபி முத்து யூடியூப் சேனல்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தினார். படங்களில் நடிப்பதிலும், சினிமா புரோமோஷன்களிலும் பங்கேற்று வந்த அவர், தற்போது விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். போட்டியாளராக இருக்கிறாரா? அல்லது கோமாளியாக இருக்கப்போகிறாரா என்பது புரோமோவில் குறிப்பிடவில்லை. பிக்பாஸில் இருந்து போன அவருக்கு மீண்டும் குக் வித் கோமாளி ஷோவில் வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் ஜிபி முத்துவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | அஜித் - விக்னேஷ் சிவன் படம்... வில்லனாக தனி ஒருவன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News