திருநங்கையாக களமிறங்கும் பிரபல நடிகர்! ZEE5 தளத்தில் வெளியாகிறது Haddi படம்!

இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ்  டிராமா ‘ஹட்டி’ திரைப்படம் ZEE5 தளத்தில் வெளியாகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Sep 6, 2023, 07:02 PM IST
  • பேட்ட படத்தில் வில்லனாக வந்தவர், நவாசுதீன் சித்திக்.
  • இவர் ஹட்டி என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.
  • இந்த படம் நாளை வெளியாகிறது.
திருநங்கையாக களமிறங்கும் பிரபல நடிகர்!  ZEE5 தளத்தில் வெளியாகிறது Haddi படம்!  title=

ஜீ ஸ்டுடியோஸ், சஞ்சய் சாஹா மற்றும் Anandita Studios ராதிகா நந்தா தயாரிப்பில், அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ள இந்த நேரடி-டிஜிட்டல் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ZEE5 தளத்தில் வெளியாகவுள்ளது.

பாலிவுட்டில் பிரபல நடிகராக விளங்குபவர் நவாசுதீன் சித்திக். இவர், முதன்முறையாகத் திருநங்கையாக நடித்திருக்கும் படம் ஹட்டி. இந்த படம், ரசிகர்களிடையே பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. நவாசுதீன் சித்திக் மற்றும் அனுராக் காஷ்யப் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் இலா அருண், முகமது ஜீஷன் அய்யூப், சவுரப் சச்தேவா, ஸ்ரீதர் துபே, ராஜேஷ் குமார், விபின் சர்மா மற்றும் சஹர்ஷ் சுக்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த பரபரப்பான பழிவாங்கல் டிராமா திரைப்படத்தை,  அறிமுக இயக்குநர் அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ளார். 

கதையின் கரு:

குற்றப்பின்னணி கொண்ட திருநங்கை கும்பலில் சேர அலகாபாத்திலிருந்து டெல்லிக்கு வரும் நவாசுதீன் சித்திக், அந்த கும்பலில் சேர்ந்து, வளர்கிறான். தன் குடும்பத்தை அழித்த அந்த கும்பலின் தலைவனாக இருந்து,  அரசியல்வாதியாக மாறிய அனுராக் காஷ்யப்பை தேடி பழிவாங்குவதே அவன் நோக்கம்.  புதுமையான களத்தில் அழுத்தமான பழிவாங்கும் கதையாக உருவாகியுள்ளது இந்த ஹட்டி திரைப்படம்.  அக்ஷத் அஜய் ஷர்மா மற்றும் ஆதம்யா பல்லா இணைந்து எழுதியுள்ள, 'ஹட்டி' தலைநகரம் முழுவதும் செயல்படும் அழுத்தமான குற்றப்பின்னணியை,  குற்றவாளிகளின் உலகை அழுத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளது. 

nawazuddin petta

தன் கதாப்பாத்திரம் குறித்து நடிகர் நவாசுதீன் சித்திக் கூறுகையில், “நான் திருநங்கை வேடத்தில் நடிப்பேன் என்று நம்பவேயில்ல. ஒவ்வொரு திருநங்கையும் ஒரு முழுமையான பெண்ணாக இருக்க ஆசைப்படுவதால், நான் இந்தக் கதாபாத்திரத்தை ஒரு பெண் கதாபாத்திரமாகவே அணுகினேன். இப்படத்தில் நடிப்பதற்காகப் படப்பிடிப்பிற்கு முன்பு, நான் திருநங்கைகளுடன் தங்கியிருந்தேன். பெண்மையைத் தழுவுவதற்கான அவர்களின் விருப்பத்தைப் புரிந்துகொண்டேன். இந்த அனுபவம் எனக்கு ஒரு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுத்தந்தது, கதாபாத்திரத்தில் நடிப்பதை விட, நான் ஒரு பெண்ணாக உணர்ந்து, அவராக இருக்க முயற்சித்தேன்.  இரண்டு முதல் மூன்று மணிநேரம் மேக்கப் செய்து, இந்த கதாபாத்திரத்திற்குத் தயாராவது மேலும்   அதே நாளில் வேறொரு கேரக்டருக்கு மாறுவது என, படப்பிடிப்பு மிகச்சவாலானதாக இருந்தது. ரசிகர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கும். 

மேலும் படிக்க | நடிகை திவ்யா ஸ்பந்தனா இறந்துவிட்டதாக வதந்தி! பொய் தகவல் பரவ காரணம் என்ன..?

அனுராக் காஷ்யப் கூறுகையில், “ஹட்டியை உருவாக்க அக்ஷத் மற்றும் அவர் குழு உழைத்த கடின உழைப்பைக் கண்டு, நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அக்ஷத் எனக்குப் பல வருடங்களாக AD (உதவி இயக்குநராக) உதவியிருக்கிறார், இயக்குநராக அவர் அறிமுகமான படத்திலேயே நடிகராக முன் வரிசையில் இடம் பெறும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளது. ஹட்டி அழுத்தமான களத்தில் உணர்வுப்பூர்வமான கதையாக இருக்கும் மேலும் நீங்கள் இதுவரை பார்த்திராத உலகைக் காட்டும். மேலும், இந்த புதிய உலகத்தில் நவாஸை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ZEE5 இல் ஹட்டி படத்தின் வெளியீட்டிற்காக நான் உற்சாகமாகக் காத்திருக்கிறேன், பார்வையாளர்கள் கண்டிப்பாக இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.  

மேலும் படிக்க | அனுஷ்காவை ‘ஹாட் ஜிலேபி’ என்றழைத்த பிரபல காமெடி நடிகர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News