திருநங்கையாக களமிறங்கும் ரஜினி பட நடிகர்..! ரசிகர்கள் வரவேற்பு..!

பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக் ஒரு படத்தில் திருநங்கையாக நடிக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 16, 2023, 06:34 PM IST
  • பேட்ட படத்தில் நடித்தவர் நவாசுதீன் சித்திக்.
  • பாலிவுட்டில் பெரிய நடிகர் இவர்.
  • இவர் ஒரு படத்தில் திருநங்கையாக களமிறங்குகிறார்.
திருநங்கையாக களமிறங்கும் ரஜினி பட நடிகர்..! ரசிகர்கள் வரவேற்பு..!  title=

இந்தி திரையுலக நடிகர்களுள் பிரபமானவராக விளங்குபவர், நவாசுதீன் சித்திக். இவர், தமிழில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக நடித்திருந்தார். 

நவாசுதீன் சித்திக்: 

1999 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகிற்குள் நுழைந்தவர் நவாசுதீன் சித்திக். இவர், தனது முதல் படத்திலேயே பிரபல நடிகர் அமீர்கானுடன் சேர்ந்து நடித்தார். பின்பு அவ்வப்போது சில விளம்பர படங்களில் நடிப்பது, துணை கதாப்பாத்திரங்களில் நடிப்பது என்றிருந்தார். இவர், 2012ஆம் ஆண்டு கஹானி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம், இவரது சினிமா வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. தனது நடிப்பு திறமையினை படத்திற்கு படம் மாற்றும் திறமை இவரிடம் நிரம்பியிருந்தது. தனது நடிப்பிற்காக இவர் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்தை பின்னுக்குத்தள்ளிய ஜெயிலர்..! 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா..!

பேட்ட பட வில்லன்:

2019ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த படம், பேட்ட. இந்த படத்தில் சிங்காரம் (அ) சிங்கார் சிங் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். பிற வில்லன்களை போல துப்பாக்கி மற்றும் கத்தியை தூக்கிக்கொண்டு அலைந்தாலும் வில்லத்தனத்தில் அசால்ட் செய்திருப்பார். இவரது நடிப்பு தமிழ் ரசிகர்கள் பலருக்கு பிடித்துப்போனது. 

திருநங்கையாக..

நவாசுதீன் சித்திக் தற்போது பாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் 2018ஆம் ஆண்டு சாக்ரட் கேம்ஸ் என்ற பெயரில் த்ரில்லர் தொடர் ஒன்று வெளியானது. இந்த தொடருக்கு பிறகு இவருக்கு சீரீஸில் நடிக்க பல வாய்ப்புகள் குவிந்தன. இதையடுத்து அவர் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு ஹட்டி (HaddI) என பெயரிடப்பட்டுள்ளது. இதில், அனுராக் கஷ்யப், இல்லா அருண், விபின் ஷர்மா உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். கிராமத்தில் ஹரி எனும் பெயரில் வளரும் ஒருவன், பெண்ணாக மாறி புதிதாக ஒரு வரலாற்றை ஏற்படுத்துவது போல இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் தைரியமான திருநங்கை கதாப்பாத்திரத்தில் நவாசுதீன் சித்திக் நடித்துள்ளார். 

மேலும் படிக்க | ஜெயிலர் 2 கன்ஃபார்ம்..! ரஜினியுடன் கைக்கோரக்கும் விஜய்..? வெளியானது பரபர தகவல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News