Happy Birthday Mohanlal: இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா மோகன்லால்?

Happy Birthday Mohanlal: மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மோகன்லால் விஸ்வநாதன் இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  

Written by - RK Spark | Last Updated : May 21, 2023, 07:12 AM IST
  • 63வது பிறந்தநாள் கொண்டாடும் மோகன்லால்.
  • ஜெய்லர் படத்தில் நடித்து வருகிறார்.
  • ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Happy Birthday Mohanlal: இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா மோகன்லால்? title=

கேரள தேசத்தில் பிறந்து மலையாளத்தில் மட்டுமல்லாமல் இன்று உலகம் முழுவதும் அறியப்படும் நடிகராக இருப்பவர்தான், ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ‘லாலேட்டேன்’. ஒவ்வொரு கலைஞனுக்கும் தனது முதல் முயற்சி தோல்வி அல்லது சரியாக அமையாமல் இருக்கலாம், அதுபோல இவருக்கும் அமைத்தது. தனது முதல் படத்தில் சரிவை சந்தித்தாலும் இரண்டாம் படத்தில் ஹிட் கொடுத்து மலையாள சினிமாவை திரும்பி பாக்க செய்தவர் தான் “மோகன்லால் விஸ்வநாதன்”.  மோகன்லால் ஒரு தன்னியல்புடன் கூடிய நடிகராக, ஒரு கேரக்டரின் உள்ளுணர்வுகள் மற்றும் மனக்குமுறல்களை எளிதாகவும் மிகவும் விரைவாகவும் வெளிப்படுத்தும் திறமை கொண்டவராவார். இயக்குநரின் விருப்பத்திற்கேற்ப நம்பக்கூடிய முகபாவங்களை எளிதாக வெளிப்படுத்தி மிரளவைப்பார். மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என 350க்கு மேற்பட்ட படங்களில் பல மொழிகளில் நடித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகவும் திறமையான நடிகராக மோகன்லால் கருதப்படுகிறார். இப்பொது அவர் தனது 63 வயதில் அடியெடுத்து வைக்கின்றார்.

மேலும் படிக்க | Cook With Comali: வந்தவுடன் எலிமினேட் ஆகும் ‘இந்த’ போட்டியாளர்..! வாழைப்பழ டாஸ்க்தான் காரணமா? 

முதல் படம் சரிவு

இவரது முதல் படமான தீரன் நோட்டோம் 1978ஆம் ஆண்டு, வி.அசோக் குமார் இயக்கத்தில், எம்.ஜி.ராதாகிருஷ்ணன் இசையில் சென்சார் போர்டு பிரச்னை காரணமாக வெளிவராமல் போனது.

ஹிட் கொடுத்த இரண்டாம் படம் 
 
முதல் படத்தின் தோல்வியை தொடர்ந்து இவர் நடித்த அடுத்த படம் தான் “பாரதம்”. இந்த படம் 1991ஆம் ஆண்டு சிபி இயக்கத்தில், ரவீந்திரன் ஜோஹான்சன் இசையில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்தது. “பாரதம்”  படத்தின் மூலம் மலையாள துறையில் பிரபலமடைந்தார் மோகன்லால். ஏனென்றால் தனது இரண்டாம் படத்திலே அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. 

திரைப்படங்களும் மற்றும் விருதுகளும்

இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் “வனப்பரஸ்தம்(1980)”, “மஞ்சில் விரிஞ்சு பூக்கள் (1980)”, “சஞ்சரி (1981)”, “திரிஷ்யம் (2013)” .தமிழில், “கோபுரவாசலில் (1991)”, “இருவர் (1997)”, ஜில்லா (2014)”, “உன்னை போல் ஒருவன் (2009)”, காப்பான் (2019)”. தெலுங்கில் “மனமந்த(2016)”, ஜனதா கார்கே(2016)”, கன்னடவில், “மைத்ரி (2015)”, ஹிந்தியில், “கம்பெனி (2002)”, “ராம்கோபால் வர்மா (2007)”, “டெஸ்ஸ்(2012)” என அனைத்து மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

மோகன்லால் கிரீடம் , பாரதம், வனப்பரஸ்தம், ஜனதா கார்கே, முந்திரியல்லிகள் தளிர்க்கும் போல், புலிமுருகன் போன்ற படங்களுக்கு தேசிய விருது பெற்றுள்ளார். இவர் இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருது பெற்றார் மற்றும் இவர் உன்னை போல் ஒருவன் படத்திற்கு ஆனந்த விகடன் சிறந்த துணை நடிகர் விருது பெற்றார். மோகன்லால் நடித்த “குரு” படம் ஆஸ்கார் விருதுக்கு நோமின்டே செய்யப்பட்டது. 2009-ஆம் ஆண்டில் இந்திய ராணுவம் அவருக்கு லெப்டினன்ட் கலோனல் பட்டத்தை வழங்கி மேலும் அவரை சிறப்பித்தது. தற்போது சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் புதிய படமான “ஜெயிலர் ”படத்தில் ரஜினியுடன் கைகோர்க்கிறார் மோகன்லால். இன்னும் அதே துடிப்புடன், இளம் நடிகர்களுடன் போட்டிபோட்டு நடித்துக்கொண்டிருக்கும் மோகன்லால், மேலும் பல விருதுகள் பெற்று மென்மேலும் வளர வாழ்த்துவோம்.

மேலும் படிக்க | பிச்சைக்காரன் 3 வந்தால் என்னவாகும்? கலக்கத்தில் மக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News