சிவகார்த்திகேயனின் Social Distancing பஞ்ச் டயலாக்.. நன்றி கூறிய விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

"சமூக தூரத்தை சுருக்கமாக இரண்டு வரிகளில் சொன்ன வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராமுக்கு இந்த பாராட்டு சேர வேண்டும் எனக்கூறிய நடிகர் சிவகார்த்திகேயன்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Apr 2, 2020, 10:39 PM IST
சிவகார்த்திகேயனின் Social Distancing பஞ்ச் டயலாக்..  நன்றி கூறிய விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக காவல்துறையினரும் மக்களிடையே தொடர்ந்து சமூக இடைவெளியை எப்படி கடைபிடிப்பது மற்றும் கொரோனவில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது உட்பட பல விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். 
 
இதனிடையில், திருபூர் மாவட்ட ஆட்சியர் (IAS) அதிகாரி விஜயகார்த்திகேயன் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போரில் ஒரு கிருமிநாசினி மண்டலத்தை அமைத்ததிலும், சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கவனித்துக்கொள்வதிலும் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார். 

அவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ஒரு படத்தில் வரும் டயலாக்கை மேற்கோள்காட்டி "நன்றி" தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் வரும் ஒரு பஞ்ச் உரையாடலை பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த பஞ்ச் டயலாக் இதுதான் "நீ யாரா வேணும்னா இரு.. எவனா வேணும்னா இரு...  ஆனா என்கிட்ட இருந்து கொஞ்சம் தளளியே இரு"

 

திருபூர் மாவட்ட IAS விஜயகார்த்திகேயன் டிவிட்டருக்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், "சமூக தூரத்தை சுருக்கமாக இரண்டு வரிகளில் சொன்ன வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராமுக்கு இந்த பாராட்டு சேர வேண்டும். அதற்கு முன்னதான டிவீட்டில் "கிரேட் ப்ரோ ... கீப் கோயிங்" என்று விஜயகார்த்திகேயனை பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.