சுடரின் கண்ணுக்கு தெரிந்த இந்து: கண்ணீர் விட்டு அழும் குழந்தைகள் - இன்றைய நினைத்தேன் வந்தாய் அப்டேட்

Ninaithen Vandhai update : நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில் குழந்தைகளை கட்டிப்பிடிக்க இந்து ஆசைப்பட்டபோதும் அது முடியாமல் போக அவள் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து அழுகிறாள். அப்போது சுடரின் திடீர் என்ட்ரி அடுத்த புயலை கிளப்புகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 24, 2024, 12:21 PM IST
  • நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்
  • குழந்தைகளின் கண்களுக்கு தெரியாத இந்து
  • கட்டியணைக்க முடியாமல் பரிதவிக்கும் சூழல்
சுடரின் கண்ணுக்கு தெரிந்த இந்து: கண்ணீர் விட்டு அழும் குழந்தைகள் - இன்றைய நினைத்தேன் வந்தாய் அப்டேட் title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்து வீட்டிற்கு வந்து கனகவல்லி மற்றும் எழிலிடம் பேச அவள் யார் கண்ணுக்கும் தெரியவில்லை என்று அறிந்து கலங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, இந்து குழந்தைகள் ரூமுக்குள் நுழைய நான்கு பேரும் ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து அம்மாவை நினைத்து அழுது பீல் பண்ண குழந்தைகளிடம் பேச முயற்சி செய்கிறாள் இந்து, அம்மா இங்க தான் இருக்கேன் என்று சொல்ல முயற்சி செய்கிறாள். அஞ்சலி என்னம்மா இருக்கீங்க? நீங்க வரவே மாட்டீங்களா? உங்களை கட்டி பிடிக்கணும் போல இருக்கு என்று அழுகிறாள். 

மேலும் படிக்க | இதயம் அப்டேட்: பாரதியை வீட்டு வேலைக்காரியாக மாற்றிய சாரதா.. ஆதி கொடுத்த சர்ப்ரைஸ்

இந்து வா அம்மாவை கட்டி பிடித்துக்கோ என்று கட்டி கொள்ள செல்ல அதுவும் முடியாமல் போகிறது. இதனால் இந்து ஐயோ கடவுளே எனக்கு ஏன் இந்த நிலைமை என்று அழுது புலம்பி வீட்டிற்கு வெளியே வந்து உட்காருகிறாள். இந்த நேரம் பார்த்து சுடர் வீட்டிற்கு வர அவள் கண்ணுக்கு இந்து தெரிய யார் நீங்க என்று கேட்க நான் உனக்கு தெரியுறானா என்று இந்து கேட்க சுடர் ஆமாம், தெரியறீங்க.. யார் நீங்க எதுக்கு வெளியே உட்கார்ந்து இருக்கீங்க என்று கேட்க நான் இந்து என்று சொல்ல வர சுடர் நீங்க இந்துவோட பிரண்டா சரி உள்ள வாங்க என்று கூப்பிடுகிறாள். 

இந்து இல்ல நான் வரல கிளம்பறேன் என்று இந்து சொல்ல சுடர் உள்ள வாங்க என்று கூப்பிட்டு உள்ளே செல்ல ஹிந்துவும் அவளுடன் சேர்ந்து வீட்டிற்குள் நுழைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல்: சௌந்தரபாண்டியை சுற்றி வளைத்த பரணி, ஷண்முகம்.. பாண்டியம்மாவால் வந்த ஷாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News