இதயம் அப்டேட்: பாரதியை வீட்டு வேலைக்காரியாக மாற்றிய சாரதா.. ஆதி கொடுத்த சர்ப்ரைஸ்

Idhayam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 24, 2024, 10:32 AM IST
  • இதயம் : இன்றைய எபிசோட்.
  • ஆதியை ஆபீசுக்கு அனுப்பி வைக்கும் பாரதி.
  • சாப்பிடும் போது ரொமான்ஸ் செய்யும் பாரதி ஆதி.
இதயம் அப்டேட்: பாரதியை வீட்டு வேலைக்காரியாக மாற்றிய சாரதா.. ஆதி கொடுத்த சர்ப்ரைஸ் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘இதயம்’ சீரியல்.

இதயம் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆபிஸ் கிளம்பிய பாரதி கையில் சாரதா வீட்டு கொத்து சாவியை கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, சாரதா இனிமே இந்த வீட்டு பொறுப்பு எல்லாத்தையும் நீதான் பார்த்துக்கணும் என்று சொல்ல பாரதியும் ஆதியும் மீண்டும் மேலே வருகின்றனர், பாரதி என்னை இந்த வீட்டில் யாருக்குமே பிடிக்கல. உனக்கு மட்டும் தான் என்னை பிடிச்சிருக்கு, உன்னுடைய அன்பு மட்டும் தான் எனக்கு கிடைக்குது என்று பேச ஆதியும் இங்க எல்லாரும் என்ன மனநிலையில் இருக்காங்கனு என்னால் புரிஞ்சிக்க முடியுது என்று சொல்கிறான். 

ஆதியை ஆபீசுக்கு அனுப்பி வைக்கும் பாரதி

இதையடுத்து பாரதி ஆதியை ஆபிசுக்கு வழி அனுப்பி வைக்கிறேன் என்று கூப்பிட ஆதி பாரதிக்கு முத்தமிட்டு ரொமான்ஸ் செய்கிறான். பிறகு பாரதி ஆதியை ஆபிஸ் அனுப்பி வைக்க இதை மேலே இருந்து பார்த்த சாரதா இன்னும் கொஞ்ச நாள்ல உன்னை மொத்தமாக இந்த வீட்டில் இருந்து அனுப்பறேன் என்று சபதம் எடுக்கிறாள். 

அடுத்து சாரதா, ஸ்வேதா, அறிவு என எல்லாரும் ஷோபாவில் உட்கார்ந்திருக்க பாரதியை கூப்பிட்டு வீட்டு சமையல்காரி குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு லீவ் போட்டுட்டா, இன்னைக்கு நீ சமைக்கறியா என்று கேட்க பாரதி  சமைக்கிறேன் என்று சொல்லி சமையல் வேலையை முடிக்க பிறகு அவளை துணி துவைக்க வைக்கின்றனர். 

மேலும் படிக்க | அமரன் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த சிவகார்த்திகேயன் .. விரைவில் ரிலீஸ்!

சாப்பிடும் போது ரொமான்ஸ் செய்யும் பாரதி ஆதி

இதனையடுத்து எல்லாரும் சாப்பிட்டு முடித்த பிறகு காபி கேட்டு வேலை வாங்குகின்றனர், பிறகு நைட் பாரதி ஆதிக்காக காத்திருக்க ஆதி வீட்டிற்கு வந்ததும் தமிழ் அம்மா இன்னும் சாப்பிடாமல் உங்களுக்காக தான் வைட் பண்ணிட்டு இருந்தாங்க என்று சொல்கிறாள். இதையடுத்து ஆதி தமிழுக்காக ஏற்பாடு செய்த ரூமுக்கு கூட்டி சென்று சர்ப்ரைஸ் கொடுக்கிறான். பிறகு ஆதியும் பாரதியும் ஒன்றாக சாப்பிட ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி ஊட்டி கொண்டு சந்தோசப்படுகின்றனர்.

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

இதயம்: சீரியலை எங்கு பார்ப்பது?

இதயம் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | கல்கி படத்தில் புஜ்ஜி கேரக்டருக்கு வாய்ஸ் கொடுத்த கீர்த்தி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News