என் போட்டோ அருவருப்பா?! வெப்சைட்டை கடித்து குதறிய மாளவிகா

மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படத்தை செய்தியாக வெளியிட்ட வெப்சைட்-ஐ, டிவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 08:11 AM IST
  • மாஸ்டர் நாயகி மாளவிகா அதிருப்தி
  • மார்ஃபிங் புகைப்படத்தை வெளியிடலாமா?
  • நியூஸ் வெப்சைட் மீது பாய்ச்சல்
என் போட்டோ அருவருப்பா?! வெப்சைட்டை கடித்து குதறிய மாளவிகா title=

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான மாளவிகா மோகனன், தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மூலம் தமிழின் முன்னணி நடிகையாக உயர்ந்தார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது எடுக்கும் சூப்பரான புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.

ALSO READ | ’தியேட்டர் திருவிழா’ அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ள 6 மெகா பட்ஜெட் திரைப்படங்கள்

கவர்ச்சியில் கிறுகிறுக்க வைக்கும் புகைப்படங்களையும் பதிவேற்றும் அவர், அண்மையில் காஷூவலாக எடுத்த கிளாமர் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதனை யாரோ சில மார்ஃபிங் செய்து மிகவும் அசிங்கமான புகைப்படமாக மாற்றியதாக தெரிகிறது. அதனை அடிப்படையாக வைத்து, பிரபல வெப்சைட் ஒன்று செய்தியை உருவாக்கி வெளியிட்டது.

இதனைப் பார்த்த மாளவிகா கடும் கோபமடைந்தார். தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், அந்த வெப்சைட் வெளியிட்ட செய்தியை பகிர்ந்து, மார்ஃபிங் புகைப்படத்தை முன்னணி ஊடகம் செய்தியாக வெளியிடலாமா?, அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டாமா? என தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படத்தின் ஒரிஜினலையும் தற்போது வெளியிட்டு, இனிமேல் மார்ஃபிங் புகைப்படத்தை பார்த்தீர்கள் என்றால் ரிப்போர்ட் செய்யுங்கள். சோஷியல் மீடியா மைலேஜூக்காக இத்தகைய செய்திகளை ஒருபோதும் வெளியிடாதீர்கள் என கடிந்து கொண்டுள்ளார்.  

ALSO READ | அஜித் மனைவி பெயரில் போலி டிவிட்டர் கணக்கு..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News