இந்தப் பிறந்த நாளுக்கு டபுள் ட்ரீட்! அதுவும் இப்படியொரு ஸ்கெட்ச்சா?

விஜய்யின் 66ஆவது படமான இது அவரது சமீபத்திய ஆக்‌ஷன் படங்களைப்போல அல்லாமல் செண்டிமெண்ட் கதையம்சம் கொண்ட குடும்பப் படமாக உருவாகிவருகிறதாம்.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jun 15, 2022, 12:29 PM IST
  • நடிகர் விஜய்யின் 66 ஆவது படத்தில் ரஷ்மிகா நடித்துவருகிறார்.
  • ஏராளமான நட்சத்திரங்களுடன் குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகிவருகிறது.
  • படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பிறந்த நாளுக்கு டபுள் ட்ரீட்! அதுவும் இப்படியொரு ஸ்கெட்ச்சா? title=

நடிகர் விஜய் இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். விஜய்யின் 66ஆவது படமான இதில், ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, ஏராளமான நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். விஜய்யின் சமீபத்திய ஆக்‌ஷன் படங்களைப்போல அல்லாமல் செண்டிமெண்ட் கதையம்சம் கொண்ட குடும்பப் படமாக இது உருவாகிவருகிறதாம்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் எனும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்துவருகிறது. இந்நிலையில், இதுகுறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். 

விஜய்யின் சமீபத்திய படங்களான சர்கார், மெர்சல், பிகில், பீஸ்ட் உள்ளிட்டவற்றின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்த நாளையொட்டித்தான் வெளியிடப்பட்டன. அந்த அடிப்படையில்தான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் விஜய்யின் பிறந்த நாளுக்கு வெளியாகவுள்ளதாம்.

இதுமட்டுமல்லாமல் விஜய்யின் பிறந்த நாளுக்கு இம்முறை மற்றொரு படம் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்படவுள்ளதாம். அதாவது விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 67 ஆவது படத்தை இயக்கவுள்ளதாக பல நாட்களாகவே கூறப்பட்டுவருகிறது. ஆனால் அதுபற்றி அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை.

மேலும் படிக்க | ரஜினிக்காக சிவகார்த்திகேயன் செய்யப்போகும் சம்பவம்..! - இந்த தடவையும் ஹிட்தானாம்!

 

லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் வெளியானதும் இதுபற்றிய அறிவிப்புவரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் இப்படத்தின் அறிவிப்பும் விஜய்யின் பிறந்த நாளுக்கு வரவுள்ளதாம். அதாவது 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிறந்த நாளுக்கு முதல் நாளான ஜூன் 21ஆம் தேதி மாலையும் 67 படத்தின் அறிவிப்பு பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

வழக்கமாக ஏதேனும் ஒரு படம் பற்றிய அறிவிப்பு வந்தாலே விஜய் ரசிகர்களைக் கையில் பிடிக்க முடியாது. இணையம் முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். இம்முறை இரண்டு அறிவிப்புகள் வரவுள்ளதாகக் கூறப்படுவதால் இந்த பிறந்த நாள் விஜய்யின் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையவுள்ளது.

மேலும் படிக்க | மாஸ் காட்டும் கமல்ஹாசன்..! விஜய்யின் ‘வசூல்’ இடம் பறிபோகிறதா? ஓர் அலசல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News