69வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தேர்வராக பிரபல தமிழ் இயக்குநர் எம்.வசந்த் இருந்தார். ரசிகர்கள் பலர் தமிழில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்ற சில படங்களுக்கு விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களின் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
ஏமாற்றமடைந்த ரசிகர்கள்..
தேசிய விருதுக்காக சில தமிழ் படங்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கும் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கர்ணன்’ திரைப்படத்திற்கும் விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவை மட்டுமன்றி பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ படமும் தேர்வாகியிருந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படமும் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியிருந்த ‘விநோதய சித்தம்’ படமும் தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தன.
சிறந்த துணை நடிகருக்கான விருது, ஜெய் பீம் பட நடிகர்களான லிஜோமோல் ஜோஸ் அல்லது மணிகண்டன் ஆகியோருக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது நடக்கவில்லை. மிமி படத்தில் நடித்திருந்த பங்கஜ் திரிபாதிக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
விருதுகளை வென்ற தமிழ் படங்கள்..
>Non-Feature film வகையில், சிறந்த படிப்பினைக்கான படத்திற்கான விருதினை ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ என்ற படம் பெற்றுள்ளது.
>சிறந்த தமிழ் படத்திற்கான விருதினை ‘கடைசி விவசாயி’ படம் பெற்றுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படத்தை எம்.மணிகண்டன் இந்த படத்தினை இயக்கியிருந்தார். இதில் விவசாயியாக நடித்திருந்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
>முழு நீள திரைப்படத்தில் சிறந்த பாடகிக்கான விருதினை “இரவின் நிழல்” திரைப்படத்திற்காக ஸ்ரேயா கோஷல் பெற்றுள்ளார். இந்த படத்தினை பார்த்திபன் இயக்கி நடித்திருந்தார். Non-linear வடிவில் உருவான திரைப்படம் இது. ஸ்ரேயா கோஷல் இந்த படத்தில் மாயவா சாயவா என்ற பாடலை பாடியிருந்தார்.
>குறும்படத்திற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை ஸ்ரீகாந்த் தேவா பெற்றுள்ளார். இந்த விருது அவருக்கு ‘கருவறை’ படத்திற்காக கிடைத்துள்ளது.
மேலும் படிக்க | ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இரண்டு OTT தளங்களில் சூப்பர்ஸ்டாரை ரசிக்கலாம்
6 விருதுகள் பெற்ற RRR:
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 6 தேசிய விருதுகளை பெற்றுள்ளது.
-சிறந்த நடன கலைஞருக்கான தேசிய விருதுனை பிரேம் ரக்ஷித் பெற்றுள்ளார். இவர், நாட்டு நாட்டு பாடலின் நடன கலைஞர் ஆவார்.
-சிறந்த சண்டை காட்சிகளுக்கான தேசிய விருதினை கிங் சாலமன் பெற்றுள்ளார்
-சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ஸிற்கான தேசிய விருதினை வி. ஸ்ரீநிவாஸ் மோகன் பெற்றுள்ளார்.
-சிறந்த பிண்ணனி இசைக்கான தேசிய விருதை எம்.எம். கீரவாணி பெற்றுள்ளார்.
-சிறந்த பிரபலமான படத்திற்கான தேசிய விருதும் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு கிடைத்துள்ளது.
-சிறந்த பிண்னனி பாடகருக்கான தேசிய விருதினை கால பைரவா என்ற பாடகர் பெற்றுள்ளார்.
சிறந்த நடிகர்களுக்கான விருது..
2021ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களுள் ஒன்றான ‘புஷ்பா’ பட நாயகனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதை புஷ்பா படக்குழுவினருடன் அவர் கேக் வெட்டி கொண்டாடினார். புஷ்பா:தி ரைஸ் படத்தை அடுத்து அதன் இரண்டாம் பாகமான புஷ்பா: தி ரூல் படத்திற்கான வேலைகள் நடைப்பெற்று வருகின்றன.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஆலியா பட்டிற்கு கிடைத்துள்ளது. கங்குபாய் கத்தியவாடி படத்திற்காக அவர் இந்த விருதை பெற்றுள்ளார். இவரை போலவே கிருத்தி சனோனிற்கும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதை அவர் ‘மிம்மி’ படத்திற்காக பெற்றுள்ளார்.
மதிப்பிழந்ததா தேசிய விருது..?
தேசிய விருதுகள், உரிய படங்களுக்கு கிடைக்கவில்லை எனக்கூறி ரசிகர்கள் பலர் கொந்தளித்து வருகின்றனர். ஏனென்றால் இந்த வருடம் பல விருதுகள் கமர்ஷியல் படங்களுக்கு அதிகமாக கிடைத்துள்ளன. அதே சமயத்தில் மக்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய்பீம், கர்ணன் போன்ற படங்களுக்கு ஒரு பிரிவில் கூட விருது கிடைக்கவில்லை. இதனால், “தேசிய விருது மதிப்பிழந்து விட்டதா?” என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க | தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கும் தமிழ் படங்கள்..! முழு லிஸ்ட் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ