ஜெயலலிதாவின் உண்மை கதை தழுவி எடுக்கப்படும் "குயின்" படத்தின் டிரெய்லர் வெளியானது

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை கதை தழுவி எடுக்கப்பட்டு வரும் "குயின்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Dec 5, 2019, 09:31 PM IST
ஜெயலலிதாவின் உண்மை கதை தழுவி எடுக்கப்படும் "குயின்" படத்தின் டிரெய்லர் வெளியானது
Pic Courtesy : Youtube Grab

புது டெல்லி: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் வலைதள தொடர் "குயின்'" ஆகும். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் எம். ஜி. ராமச்சந்திரனின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த வெப் சீரிஸின் சில எபிசோடுகளை ‘கிடாரி' திரைப்பட இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடரின் தலைப்புடனான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. அதன்பின் சமீபத்தில் இந்த வெப் சீரிஸின் டீசர் வெளியானது. 26 நொடிகள் நீளம் கொண்ட அந்த டீசரில் ஜெயலலிதாவின் பள்ளிப் பருவம், திரைத்துறை வாழ்க்கை, அரசியல் என அனைத்தும் காட்சிப் படுத்தப்பட்டு உள்ளது.

சமீபத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் ஜெயலலிதாவின் இளம் வயது புகைப்படத்தைப் போலவே இருப்பதால் பலரும் பாராட்டு தெரிவித்தனர். 

இந்தநிலையில், இன்று  "குயின்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.