அடங்க மறுக்கும் ஜெயம் ரவி-யின் ‘அடங்க மறு’ Trailer.....

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உறுவான ‘அடங்க மறு’ டிரெய்லர் வெளியாகியுள்ளது....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 31, 2018, 03:13 PM IST
அடங்க மறுக்கும் ஜெயம் ரவி-யின் ‘அடங்க மறு’ Trailer..... title=

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உறுவான ‘அடங்க மறு’ டிரெய்லர் வெளியாகியுள்ளது....

சக்தி சவுந்தர் ராஜனின் ‘டிக் டிக் டிக்’ படத்திற்கு பிறகு ‘ஜெயம்’ ரவி, அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேலின் ‘அடங்க மறு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இது ‘ஜெயம்’ ரவியின் கேரியரில் இது 24-வது படம்.

இதில் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா டூயட் பாடி ஆடி வருகிறார். இப்படத்தில் ரவி போலீஸாக வலம் வரவுள்ளார். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இதற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி, போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடித்த ராஷி கண்ணா இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நடக்கும் பாலியல் துன்புறுத்துல்களை வைத்துதான் கதை எழுதியிருக்கிறார், மேலும், முனிஷ்காந்த், பொன்வண்ணன், சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர். நடிகை பூர்ணா கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். நவம்பர் மாதம் படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.  

டிரெய்லர்:-

 

Trending News