ஜெயம் ரவியின் பிரதர்: வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Brother First Look: ஜெயம் ரவியின் முப்பதாவது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று சற்று முன் வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 18, 2023, 11:25 AM IST
  • பிரதர் படத்தின் ப்ரீ பிசினஸ்.
  • பிரதர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.
  • ஜெயம் ரவியின் பிரதர் படமத்தின் அப்டேட்.
ஜெயம் ரவியின் பிரதர்: வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் title=

ஜெயம் ரவியின் 30 வது படத்தின் முக்கிய அப்டேட்: நடிகர் ஜெயம் ரவியின் 30 வது படத்திற்கு அதிகாரப்பூர்வமாக பிரதர் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவியின் பிரதர் படம்:
சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் என்கிற படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். அக்கா தம்பி பாசத்தின் கதை அம்சம் கொண்ட இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைக்கு வரவுள்ளது. மேலும் விவேகானந்த் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

மேலும் படிக்க | நயன்தாரா நடிப்பில் 'மண்ணாங்கட்டி'..! ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வைரல்..!

பிரதர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்:
இந்நிலையில் சற்று முன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள படத்தின் முதல் பார்வை (பர்ஸ்ட் லுக்) போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

மேலும் படிக்க | லோகேஷ் - ரஜினி இணைந்துள்ள படத்தின் ஷூட்டிங் எப்போது? ஹாட் அப்டேட்

பிரதர் படத்தின் ப்ரீ பிசினஸ்:
இதனிடையே முன்னதாக இந்த படத்தின் ப்ரீ பிசினஸ் எதிர்பார்க்காத வசூலை கொடுத்துள்ளது என்று சமீபத்தில் தகவல் வெளியானது. அதன்படி ஜெயம் ரவி 30 திரைப்படமான பிரதர் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை ரூ. 37 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. மேலும், ஹிந்தி டப்பிங் உரிமை ரூ. 9 கோடிக்கும், ஆடியோ உரிமை ரூ. 2.5 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ரூ. 50 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ள ஜெயம் ரவியின் 30வது திரைப்படம் தயாரிப்பாளருக்கு ரிலீஸுக்கு முன்பே போட்ட பணம் கைக்கு வந்துவிட்டது என கூறப்படுகிறது.

ஜெயம் ரவியின் அடுத்தப் படம்:
நடிகர் ஜெயம் ரவி தற்போது நயன்தாராவுடன் இறைவன், கீர்த்தி சுரேஷ் உடன் ‘சைரன்’, கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி , வாமிகா கபி ஆகிய 3 நடிகைகள் நாயகிகளாக நடிக்கும் ‘ஜெனி’ மற்றும் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ‘மார்க் ஆண்டனி’ வசூல் நிலவரம்: உலகளவில் இத்தனை கோடி கலெக்ஷனா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News