அவதூறு வழக்கில் வெற்றி: இந்திய உணவகத்தில் பிரம்மாண்ட விருந்து வைத்த ஜானி டெப்!

முன்னாள் மனைவிக்கு எதிரான அவதூறு வழக்கில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பிரிட்டனில் உள்ள இந்திய உணவகத்தில் பாலிவுட் நடிகர் ஜானி டெப் பிரம்மாண்ட விருந்து வைத்து அசத்தியுள்ளார். 

Written by - Arunachalam Parthiban | Last Updated : Jun 7, 2022, 03:27 PM IST
  • முன்னாள் மனைவிக்கு எதிரான அவதூறு வழக்கில் வெற்றி
  • உற்சாகத்தில் நண்பர்களுக்கு விருந்து அளித்த ஜானி
  • வாரணாசி எனும் உணவகத்தில் ரூ.48 லட்சத்துக்கு விருந்து
அவதூறு வழக்கில் வெற்றி: இந்திய உணவகத்தில் பிரம்மாண்ட விருந்து வைத்த ஜானி டெப்! title=

ஹாலிவுட்டில் வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம் பைரேட்ஸ் ஆப் தி கரீபியன். இதன் பல்வேறு பாகங்களில் ஜேக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரம் மூலம் இந்திய மக்களிடம் பிரபலமடைந்தவர் ஜானி டெப். இவர் தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.

50 வயதாகும் ஜானி டெப், தன்னைவிட 25 வயது குறைவான ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹேர்டை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால், 15 மாதங்கள் மட்டுமே நீடித்த இவர்களின் திருமண வாழ்க்கை பிறகு கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வந்தது. இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனிடையே, 
கடந்த 2018 ஆம் ஆண்டில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஒரு கட்டுரை ஆம்பர் ஹேர்ட் எழுதினார்.

அதில் அவர் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து ஜானியின் பெயரை குறிப்பிடாமல் அதில் எழுதி இருந்தார். அவர் அந்த கட்டுரையில் தெரிவித்தது ஹாலிவுட் உலகை அதிரவைத்தது. அத்துடன் இந்த கட்டுரை வெளியானதில் இருந்து ஜானி டெப் பட வாய்ப்புகளை இழந்தார். 

இதன்பின் கடந்த 2018 ஆம் ஆண்டில் ஜானி டெப், ஆம்பர் மீது கட்டுரைக்கு குற்றம்சாட்டி அவதூறாக ரூ.380 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்தார். தனது சினிமா வாழ்க்கையை ஆம்பர் சிதைத்து வருவதாக ஜானி தொடர்ந்த வழக்குதான் பெரிய அளவில் பேசப்பட்டது வந்தது. மேலும் கடந்த சில நாட்களாக வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதுவும் இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த இறுதிகட்ட விசாரணை உலக அளவில் பேசுபொருளானது.

மேலும் படிக்க | LIC முதலீட்டாளர்களுக்கு பலத்த அதிர்ச்சி: இதுவரை இல்லாத கீழ் மட்டத்தில் எல்ஐசி பங்கு விலை

இதனிடையே இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வெளியானது. அதில், ஜானி டெப்பிற்கு ஆதரவான தீர்ப்பே வெளியானது. அதன்படி, ஜானி டெப்பிற்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கத்துடன் ஆம்பர் செயல்பட்டது உறுதியானதாக என கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதனால் ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாயும், அபராதமாக 38 கோடி ரூபாயும் என மொத்தம் 116 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

Johnny depp

இந்த நிலையில் முன்னாள் மனைவிக்கு எதிரான அவதூறு வழக்கில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தனது நண்பர்களுக்கு ஜானி டெப் பிரம்மாண்ட விருந்து வைத்து அசத்தியுள்ளார். இங்கிலாந்தின் பிர்மிங்கம் பகுதியில் உள்ள இந்திய உணவகத்திற்கு நெருங்கிய நண்பர்கள் 21 பேருடன் இந்த விருந்தில் ஜானி பங்கேற்றார். இதில் விதவிதமான இந்திய உணவுகள் அவர்களுக்கு பரிமாறப்பட்டுள்ளன. 

இந்த விருந்துக்காக இந்திய மதிப்பில் மொத்தம் ரூ.48.1 லட்சம் ரூபாய் செலவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பேசிய உணவக உரிமையாளர், விருந்தின் போது ஜானி டெப்பின் அணுகுமுறை மிகவும் எளிமையாக இருந்ததாக தெரிவித்தார். மேலும், தான் ஒரு மிகப்பெரிய நடிகர் எனும் கர்வம் இல்லாமல் அவர் தங்களது ஊழியர்களுடன் பழகியதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் படிக்க | கடலூர்: கந்துவட்டி கொடுமையால் காவலர் தற்கொலை - அதிரவைத்த மரண வாக்குமூலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News