கடலூர்: கந்துவட்டி கொடுமையால் காவலர் தற்கொலை - அதிரவைத்த மரண வாக்குமூலம்!

கடலூரில் கந்துவட்டி கொடுமையால் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - Arunachalam Parthiban | Last Updated : Jun 7, 2022, 02:28 PM IST
  • எஸ்.பி. அலுவலகத்தில் விஷம் அருந்திய காவலர்
  • சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்
  • கந்துவட்டி கொடுமையால் விபரீத முடிவு
கடலூர்: கந்துவட்டி கொடுமையால் காவலர் தற்கொலை - அதிரவைத்த மரண வாக்குமூலம்! title=

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். வயது 27. இவர் உளுந்தூர்பேட்டை 10வது பட்டாலியன் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். ஒரு வாரத்திற்கு முன் தனக்கு கந்துவட்டி கொடுமை உள்ளதாக கூறி கடலூர் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த செல்வகுமார் நீதிமன்றம் அருகே திடீரென மயங்கி விழுந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சக காவலர்கள் உடனடியாக செல்வகுமாரை மீட்டு, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது தான் காவலர் செல்வகுமார் விஷம் அருந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வகுமார் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். 

முன்னதாக இதுகுறித்த தகவல் அறிந்த கடலூர் 3-வது மாஜிஸ்திரேட்டு ரகோத்தமன் நேரில் சென்று வாக்குமூலம் பெற்றார். அதில், குடும்ப செலவுக்காக புவனகிரி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வகுமார் ரூ.5 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். அந்த பணத்தை இரண்டு தவணைகளாக அவர் திருப்பி செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கடன் வாங்கிய ரூ.5 லட்சத்துக்கு 2 ஆண்டு வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.15 லட்சம் கொடுக்க வேண்டும் என அந்த பெண் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | IRCTC Train Ticket Reservation: இனி மாதம் 24 ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

இதனால் அதிர்ச்சியடைந்த காவலர், அவ்வளவு பணத்தை தர மறுத்துள்ளார். ஆனால் அத்திரமடைந்த பெண் செல்வகுமாருக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் மனவேதனையில் இருந்த காவலர் செல்வகுமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அறிந்த செல்வகுமாரின் உறவினர்கள் அந்த பெண்ணை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கடலூர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கந்துவட்டி கொடுமை காரணமாக காவலர் ஒருவரே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடலூர் மாவட்ட காவலர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்களில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை அறிந்து பொதுமக்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மாநில உதவிமையம்: 104

மேலும் படிக்க | எந்த முறைப்படி நயன்தாராவுடன் திருமணம்?- விக்னேஷ் சிவன் பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News