மிரட்டல் சண்டை காட்சிகளுடன் வெளியான கார்த்தி-க்கின் "கைதி" படத்தின் ட்ரைலர்

தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள நிலையில், இன்று ‘கைதி’ திரைப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Oct 7, 2019, 08:12 PM IST
மிரட்டல் சண்டை காட்சிகளுடன் வெளியான கார்த்தி-க்கின் "கைதி" படத்தின் ட்ரைலர்
Pic Courtesy : Youtube Grab

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான ‘தேவ்’ திரைப்படம் தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து மாநகரம் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கைதி’ திரைப்படத்தில் இணைந்துள்ளார். இத்திரைப்படத்தை சத்யன் சூர்யன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் ட்ரீம் வாரியர்ஸ் அசோசியேட் செய்கின்றனர். ஏற்கனவே கார்த்திக் நடிப்பில் வெளியான சகுனி, காஷ்மோரா, தீரன் அதிகாரன் ஒன்று ஆகிய படங்களுக்கு இந்நிறுவனம் அசோசியேட் செய்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படபிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. ஏற்கனவே தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் ஆதரவை பெற்றது. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இந்தநிலையில், இன்று ‘கைதி’ திரைப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் சண்டை காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது. 

 

இந்த படத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நரேன், விஜய் டி.வி தீனா, மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை சாம் சி.எஸ் அமைத்துள்ளார்.