நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் : 'பெற்றோர்கள் கிளப்பிற்கு வரவேற்கிறோம்' - சமீபத்தில் குழந்தைபெற்ற நடிகை வாழ்த்து

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிவிட்டோம் என அறிவித்துள்ளதை அடுத்து பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 9, 2022, 08:34 PM IST
  • நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு ஜீன் மாதம் திருமணமானது.
  • இருவரும் பெற்றோர்கள் ஆகிவிட்டதாக விக்னேஷ் சிவன் சமூகவலைதள பதிவு
  • குழந்தைகளின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் : 'பெற்றோர்கள் கிளப்பிற்கு வரவேற்கிறோம்' - சமீபத்தில் குழந்தைபெற்ற நடிகை வாழ்த்து

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் 9ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த  இவர்களின் திருமண வரவேற்பில், அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர். 

திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் வாங்கிவைத்திருந்ததன் காரணமாக திருமண அரங்குக்குள் செல்போனில் படம் பிடிக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்றுவிட்டு மீண்டும் தங்களது பணிகளில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில், விக்னேஷ் சிவனின் சமூக வலைதளப்பதிவுகள் தற்போது, பலரையும் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ள நிலையில், பலருக்கும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் - விக்னேஷ் சிவன் போட்ட பதிவு... திணறும் சோஷியல் மீடியா

விக்னேஷ் சிவன் தனது பதிவில், “நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகளால் நாம் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். நமது வேண்டுதல்களும், முன்னோர்களின் ஆசீர்வாதங்களும் உள்பட அனைத்தும் இணைந்து, நமக்கு 2 குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டு இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். ஆனால் இந்தக் குழந்தைகள் தத்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற பேச்சு பலரிடம் எழுந்துள்ளது. எது எப்படியோ திருமணமாகி தற்போது தாயாகியிருக்கும் நயனுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

Nayanthara

அந்த வகையில், பிரபல நடிகை காஜல் அகர்வாலும், விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பதிவில் தனது வாழ்த்துகளை தெரிவத்துள்ளார். "நயனுக்கும், விக்கியும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பெற்றோர்கள் கிளப்பிற்கு உங்களை வரவேற்கின்றேன். உங்கள் வாழ்வின் சிறந்த பகுதியாக இது இருக்கும். உயிர், உலகத்திற்கு (இரட்டை குழந்தைகளை குறிப்பிட்டு) எனது அன்பும் ஆசிர்வாதங்களும்" எனப் பதிவிட்டுள்ளார். காஜல் அகர்வாலுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | 100 கோடி வசூல் செய்த நயன்தாராவின் லேட்டஸ்ட் திரைப்படம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News