‘எதிர்நீச்சல்’ தொடர் திடீரென முடிக்கப்பட்டது ஏன்? நடிகை கொடுத்த அதிர்ச்சி தகவல்..!

Ethirneechal Serial Ending Reason : தமிழ் தொலைக்காட்சிகளில் நல்ல வரவேற்பு பெற்று தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்தத் தொடர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.   

Written by - Yuvashree | Last Updated : Jun 21, 2024, 10:04 AM IST
  • எதிர்நீச்சல் தொடர் முடிய காரணம்
  • சீரியல் நடிகை சொன்ன செய்தி
  • என்ன தெரியுமா?
‘எதிர்நீச்சல்’ தொடர் திடீரென முடிக்கப்பட்டது ஏன்? நடிகை கொடுத்த அதிர்ச்சி தகவல்..! title=

Ethirneechal Serial Ending Reason : தமிழ் சினிமாவிற்கு எந்த அளவிற்கு ரசிகர் கூட்டம் இருக்கிறதோ அதேபோல அதிக ரசிகர் கூட்டத்தைக் கொண்ட தொடர்களும் டிவி நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. இப்படி அதிகம் ரசிகர்களை கொண்ட தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல்

பெண்ணியம் பேசிய எதிர்நீச்சல்: 

இதுவரை உருவாக்கி வந்த தமிழ் சீரியல்கள் பல, மாமியார் மருமகள் சண்டை, காதல் கதை, உள்ளிட்டவை தான் சீரியல்களாக எடுக்கப்பட்டன. பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்ததை தொடர்ந்து, அப்படி வெளிவந்த தொடர் தான் எதிர்நீச்சல். பல ஆயிரம் ஆண்டு காலமாக சுட்ட பழத்தையே சுட்டு பழைய கதையையே பேசிக்கொண்டு வந்தவர்கள் இந்த சீரியலை ஆரம்பத்தில் வித்தியாசமாக பார்த்தனர். 

ஆனால், பலரது எண்ணங்களை மாற்றியமைத்திருக்கிறது எதிர்நீச்சல். பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் அட்டூழியங்களை காண்பித்திருந்த இந்த தொடர், பலரை கவர்ந்தது. குறிப்பாக, சமூகத்தில் மாற்றம் நிகழ்த்த நினைப்பவர்களுக்கு இந்த தொடர் உந்து கோலாக இருந்தது. இந்த தொடர் வெற்றி பெறுவதற்கு பெரிய காரணமே, இது குடும்ப கதையை பின்னணியாக கொண்டு அமைக்கப்பட்டிருந்ததுதான். 

திடீர் நிறுத்தம்..

எதிர்நீச்சல் தொடர்தான், சமீபத்தில் ஒளிபரப்பாகி வந்த தமிழ் சீரியல்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கிள் டாப்பில் இருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக இதன் ரேட்டிங் அப்படியே சரியத்தொடங்கியது. இதற்கு காரணம், இந்த தொடரில் இடம் பெற்றிருந்த ஆதி குணேசேகரனின் கதாப்பாத்திரத்தை மாற்றியதுதான் என்று சொல்லப்பட்டது. இந்த கதாப்பாத்திரத்தில் முன்னர் நடிகர் மாரிமுத்து நடித்தார். இவர் மாரடைப்பால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்த கதாப்பாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிக்க ஆரம்பித்தார். ஆனால், இவருக்கு மாரிமுத்துவின் நடிப்பிற்கு கிடைத்தது போல பெரிய வரவேற்பு மக்களிடம் இருந்து கிடைக்கவில்லை. 

மேலும் படிக்க | Ethirneechal 2 : விரைவில் வருகிறதா எதிர்நீச்சல் 2? நாயகி கொடுத்த அப்டேட்..

முடிக்கப்பட்ட சீரியல்..

மாரிமுத்து இல்லை என்றாலும், எதிர்நீச்சல் தொடருக்கு தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. ஆனால், இந்த சீரியல் சில நாட்களுக்கு முன்பு திடீரென்று நிறைவு பெற்றது. இதற்கான காரணம் என்ன என்று ரசிகர்களுக்கு தெரியவில்லை. இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் நடித்த நடிகை ஒருவர் இது குறித்து பேசியிருக்கிறார். 

நடிகையின் பேட்டி:

எதிர்நீச்சல் தொடரில் பட்டம்மாள் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் பாம்பே ஞானம். இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேட்டியளித்திருக்கிறார். அதில், ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடித்த மாரிமுத்து உயிரிழந்தது, பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்ததாக கூறியிருக்கிறார். 

Ethirneechal Pattammal

மேலும், இதில் அவருக்கு பதில் நடிக்க வந்த வேல ராமமூர்த்திக்கு ஆரம்பத்தில் விமர்சனம் எழுந்ததாகவும் ஆனால் மக்கள் அவரை நாட்கள் செல்ல செல்ல ஏற்றுக்கொண்டதாகவும் கூறியிருந்தார். மாரிமுத்து மரணத்திற்கு பிறகு கதையில் ஏற்படுத்தப்பட்ட சில மாற்றங்களால், சீரியலின் டிஆர்பி குறைந்து போனதாகவும், இதனால், சேனலில் இருந்து சீரியலை வேரு நேரத்திற்கு மாற்றும்படி கூறியதாக பேசியிருக்கிறார். இதையடுத்து முக்கிய முடிவெடுத்த இயக்குநர், சீரியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என முடிவு செய்து விட்டதாக கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | மீண்டும் இணைந்த எதிர்நீச்சல் டீம்.. சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News