தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ., வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஜெ.,-வாக நடிக்க கங்கணா ரனாவத் ஒப்பந்தம் ஆகியுள்ளார், இதற்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு இரண்டு தனித் தனிப் படங்களாக உருவாகி வருகிறது. பெண் இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கும் தி அயர்ன் லேடி படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். அதேப்போல் இயக்குனர் விஜய் இயக்கும் தலைவி படத்தில் யார் ஜெயலலிதாவாக நடிக்கப் போகிறார் என எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.
அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய், வித்யாபாலன், கங்கனா ரணவத் ஆகிய மூவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாக தெரிகிறது.
ஜெயலலிதா, தமிழ்நாட்டின் முதல்வராக பதவி வகித்தாலும், அகில இந்திய அளவில் கவனிக்கப்பட்ட ஒரு அரசியல் பிரபலம் ஆவார். அதனால், அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஒரு பாலிவுட் நடிகையாக இருந்தால் அகில இந்திய அளவில் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்றுதான் பாலிவுட் நடிகைகளிடம் பேசி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணவத் நடிப்பது உறுதியாகி உள்ளது.
மணிகர்ணிகா படத்திற்கு திரைக்கதை எழுதிய பாகுபலி எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் தான் தலைவி படத்தின் கதை உருவாக்கத்திலும் பங்கு பெற்றுள்ளார்.
விஷ்ணு வர்தன் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில், பாகுபலி கதையாசிரியரான விஜேந்தர பிரசாத் வசனம் எழுதவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தலைவி படத்திற்கான படப்பிடிப்பை ஏப்ரலில் ஆரம்பிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. படபிடிப்பினை மைசூர் மற்றும் பெங்களூரில் இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிப்பதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தங்களால் ஜெயலலிதாவாக கங்கனாவை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நித்யா மேனன் ஜெயலலிதா வேடத்துக்கு சரியாக பொருந்தினார், தென் இந்தியாவில் எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது ஒரு இந்தி நடிகையை, கவர்ச்சியாக நடித்து சர்ச்சைகளை உண்டாக்கும் நடிகையை ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வைப்பதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.