ஏன் இப்படி சோதிக்கிற கடவுளே என கேட்கும் தீபா! கோரிக்கையை ஏற்பானா கார்த்திக்?

Karthigai Deepam Latest Update: பிரிவுக்கு காரணம் கேட்கும் கார்த்திக்.. தீபா சொல்ல போகும் பதில் என்ன? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 15, 2023, 12:25 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலத் தொடர்
  • கடவுளிடம் முறையிடும் தீபா, காரணம் கேட்கும் கார்த்திக்
 ஏன் இப்படி சோதிக்கிற கடவுளே என கேட்கும் தீபா! கோரிக்கையை ஏற்பானா கார்த்திக்?   title=

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் (Zee Tamil TV) திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் ஒரு சிலவற்றை மட்டுமே ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். அப்படி ரசிகர்கள் பலர் விரும்பி பார்க்கும் சீரியல்களுள் ஒன்று, கார்த்திகை தீபம். இந்த தொடர் முதல் எபிசோடில் இருந்து தற்போது வரை பல விருவிருப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. இன்றைய எபிசோடிலும் இதில் பல சம்பவங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாமா..? 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ஐஸ்வர்யாவை சந்தித்து என்ன இந்த முறையும் உங்க பிளான் வேஸ்ட் ஆகிடுச்சா என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்க இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

இதனைத் தொடர்ந்து இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோடில், என்னை ஏன் இப்படி சோதிக்கிற. அவரோட வாழ்க்கையில் என்னை வரவிடாமல் செய்து இருக்கலாம் என்று கடவுளிடம் வேண்டுகிறாள் தீபா. அந்த இடத்திற்கு வரும் கார்த்திக் உங்களிடம் தனியா பேச வேண்டும் என்று சொல்கிறான். தீபாவை தனியாக அழைத்து சென்று உங்களுக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படியொரு முடிவெடுத்தீங்க என்று கேட்க தீபா இப்போதைக்கு என்கிட்ட எதையும் கேட்காதீங்க என்று சொல்லி விடுகிறாள். 

ஒரு பிரச்னையை பார்த்து பயப்பட கூடாது, அதனை சரி செய்ய முயற்சி செய்யணும் என்ன விஷயம் சொல்லுங்க என்று தொடர்ந்து கார்த்திக் கேட்க தீபா வாய் திறக்காமல் இருக்கிறாள், சரி இனிமே உங்க கிட்ட இதை பற்றி கேட்க மாட்டேன், உங்க இஷ்டம் போல் பண்ணுங்க என்று சொல்லி கார்த்திக் அங்கிருந்து நகர்கிறான். 

மேலும் படிக்க | என்னை ஏற்றுக் கொள் என கெஞ்சும் கார்த்திக்! முடிவு என்னிடம் இல்லை யமுனா பதில்

அடுத்து தர்மலிங்கம் ரூமுக்குள் சோகமான உட்கார்ந்து இருக்க அங்கு வந்த ஜானகி வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துடுங்க என்று சொல்ல தர்மலிங்கம் நம்ம பொண்ணு நல்லா இருக்கனும்னு எல்லாம் செய்தோம், ஆனால் அவ அதை புரிஞ்சிக்கல என்று வருத்தப்பட்டு பணத்தை திருப்பி கொடுக்க கிளம்பி செல்கிறார். 

குணாவை சந்தித்து வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வந்ததாக சொல்ல அவன் 6 மாத வட்டியை சேர்த்து கொடுக்க சொல்ல தர்மலிங்கம் எதுக்கு 6 மாதம் வட்டி கொடுக்கணும் என்று கேள்வி எழுப்ப குணா இவரை பிடித்து தள்ளி விட கார்த்திக் வந்து தாங்கி பிடிக்கிறான், இது யார்? வெறப்பா இருக்கான் சொந்தகார பையனா என்று கேட்க கார்த்திக் உங்க மருமகன்னு சொல்லுங்க மாமா என்று சொல்ல தர்மலிங்கம் திகைத்து நிற்கிறார். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | தமிழா தமிழா மேடையை மிரள வைத்த சிறுவன்! வைரலாகும் புதிய ப்ரமோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News