கார்த்திகை தீபம் அப்டேட்: தீபாவை மிரட்டிய ரூபஸ்ரீ.. கிடுக்குபிடி போட்ட கார்த்திக்..!

கார்த்திக் தன்னை மாமா என்று கூப்பிட்ட விஷயத்தை சொல்லி தர்மலிங்கம் பூரிப்படைய, ஜானகி உட்பட எல்லாரும் இதை கேட்டு சந்தோஷமடைகின்றனர். ஆனால், தீபா மனதில் இருக்கும் காதலை வெளியே சொல்ல முடியாமல் வேதனை அடைகிறாள்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 9, 2023, 01:04 PM IST
  • மாமனாரை மாமா என அழைத்த கார்த்தி
  • பூரிப்பில் இருக்கும் மாமனார் தர்மலிங்கம்
  • வட்டி கேட்டு வந்து தள்ளிவிட்ட குணா
கார்த்திகை தீபம் அப்டேட்: தீபாவை மிரட்டிய ரூபஸ்ரீ.. கிடுக்குபிடி போட்ட கார்த்திக்..! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தர்மலிங்கத்துக்கு ஆதரவாக நின்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

மேலும் படிக்க | என்னை ஏற்றுக் கொள் என கெஞ்சும் கார்த்திக்! முடிவு என்னிடம் இல்லை யமுனா பதில்

குணா தர்மலிங்கத்திடம் 6 மாத வட்டி கேட்க செல்கிறார். அங்கு தர்மலிங்கத்தைப் பார்த்ததும் குணா அவரை தள்ளி விட, அருகில் இருக்கும் கார்த்திக் தர்மலிங்கத்தை தாங்கி பிடிக்கிறார். அத்துடன் உங்க மருமகன்னு சொல்லுங்க மாமா என்று சொல்லிவிட்டு, வட்டி கேட்டு வந்து தன்னுடைய மாமனாரை தள்ளிவிட்ட குணாவையும் அவனது ஆட்களையும் அடித்து துவைத்து எடுக்கிறார். மறுபக்கம் தர்மலிங்கம் வீட்டிற்கு ரூபாஸ்ரீயும் அவளது பாட்டி கோகிலாவும் வந்து ஊரில் கச்சேரி இருக்கு, நீ பாடுறதுக்கு வந்துடனும் என்று சொல்கின்றனர்.

மேலும், முன்பெல்லாம் நீயா வந்து கச்சேரி இருக்கானு கேட்பா, இப்போ நாங்க வந்து சொன்னா தான் வருவியா? காசுக்கு மட்டும் கரெக்ட்டா வந்து நிற்கறீங்களே என்று சத்தம் போடுகின்றனர். அடுத்து கார்த்திக் வர ரூபாஸ்ரீயிடம் ஒரு பாட்டு பாருங்க என்று சொல்ல அவள் தொண்டை சரியில்லை என சமாளித்து விட, சரி விடுங்க கச்சேரில கேட்டுக்கறேன் என்று சொல்கிறான். 

பிறகு அவர்கள் கிளம்பியதும் தர்மலிங்கம் கார்த்திக் தன்னை மாமா என்று கூப்பிட்ட விஷயத்தை சொல்லி சந்தோசப்பட ஜானகி உட்பட எல்லாரும் இதை கேட்டு சந்தோஷமடைகின்றனர். தீபா மனதில் இருக்கும் காதலை வெளியே சொல்ல முடியாமல் வேதனை அடைகிறாள். மேலும் தர்மலிங்கம் இவர் மாப்பிள்ளையாக வந்த பிறகு தான் எல்லாரும் கொஞ்சம் மரியாதையா பார்க்க ஆரம்பித்தாங்க. ஆனால் இனி அந்த மரியாதையை கிடைக்காது என்று வருத்தப்படுகிறார். அந்த இடத்தில் தீபா தன்னால் உண்மையை சொல்ல முடியலையே என்று வருத்தப்படுகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | தமிழா தமிழா மேடையை மிரள வைத்த சிறுவன்! வைரலாகும் புதிய ப்ரமோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News