கார்த்திகை தீபம்: மேனேஜரை வைத்து கார்த்தியை சீண்டும் ஆனந்த்.. நடந்தது என்ன?

Karthigai Deepam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 17, 2024, 03:39 PM IST
  • கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்.
  • மேனேஜரை வைத்து கார்த்தியை சீண்டும் ஆனந்த்.
  • தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது.
கார்த்திகை தீபம்: மேனேஜரை வைத்து கார்த்தியை சீண்டும் ஆனந்த்.. நடந்தது என்ன? title=

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மில்லுக்கு வந்த முதல் நாளே கார்த்திக் மிஷினை சரி செய்து ஆனந்துக்கு ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, ஆனந்த் இவனை ஏதாவது பண்ணி இங்க இருந்து துரத்தணும் என்று கார்த்திக்கு எதிராக சதி செய்ய யோசித்து கொண்டிருக்கிறான், பிறகு மேனேஜரை வைத்து ஒரு திட்டத்தை தீட்டுகிறான். அடுத்ததாக மேனேஜர் கார்த்தியை கூப்பிட்டு எனக்கு டீ குடிக்கணும் போல் இருக்கு, போய் டீ போட்டு எடுத்துட்டு வா என்று சொல்லி ஒரு மேஜை மீறி ஏறி உட்காருகிறான். 

மேலும் படிக்க | சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

 

அடுத்து கார்த்தியும் டீயை போட்டு கொண்டு வந்து மேனேஜரிடம் கொடுக்காமல் அவரை கீழே இறங்க வைத்து கார்த்திக் அந்த மேஜை மீது ஒய்யாரமாக உட்கார்ந்து டீ குடிக்கிறான், மேனேஜர் நான் எனக்கு டீ கொண்டு வர சொன்னேன் என்று சொல்ல வேலை விஷயமா என்ன வேணாலும் சொல்லுங்க, நாய் செய்கிறேன். ஆனால் உங்களுடைய பெர்சனல் வேலையெல்லாம் பார்க்க முடியாது என்று எதிர்த்து பேச தொழிலார்கள் கை தட்டி கொண்டாடுகின்றனர். 

மறுபக்கம் அபிராமி வீட்டில் ஐஸ்வர்யாவும் ரியாவும் கூட்டு சேர்ந்து கொண்டு ரியாவின் அத்தை மாமா என்று சீரியல் ஆர்டிஸ்ட் சிலரை வர வைத்து அபிராமியிடம் பேசி சமாதானம் செய்து வைப்பது போல் நடிக்க வைக்க ஏற்பாடு செய்கின்றனர், அவர்களும் சீக்கிரம் நடிச்சிட்டு நாங்க கிளம்பனும், சீரியலுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கோம் என்று பேசுகின்றனர். இதையெல்லாம் மைதிலி ஒட்டு கேட்டு விடுகிறாள். 

அடுத்து ரியாவின் அத்தை மாமாவாக வந்தவர்கள் அபிராமிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ‘விசில் போடு’ பாடலுக்கு கிடைத்த நெகடிவ் விமர்சனம்! மதன் கார்கி கூறிய பதில்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News