கார்த்திகை தீபம்: அபிராமியிடம் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தீபா.. காத்திருக்கும் அடுத்த சிக்கல்

Karthigai Deepam TV Serial Online: அபிராமியிடம் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தீபா.. காத்திருக்கும் அடுத்த சிக்கல் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 30, 2023, 11:51 AM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
  • இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கார்த்திகை தீபம்: அபிராமியிடம் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தீபா.. காத்திருக்கும் அடுத்த சிக்கல் title=

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்று தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தின்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அபிராமியிடம் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தீபா.. காத்திருக்கும் அடுத்த சிக்கல் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்:

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்று தீபா காபி எடுத்து வர அபிராமியை பார்த்து ஷாக் ஆனாள். இதனை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | வங்கி கணக்கில் இவ்வளவு பணத்திற்கு மேல் இருந்தால் வருமான வரி நோட்டீஸ் வரலாம்!

அதாவது, தீபா அபிராமியிடம் சிக்க கூடாது என்பதற்காக காபி கொடுக்காமல் வெளியே வர சினேகா அவளை தடுத்து நிறுத்த தீபா இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக இதெல்லாம் என்னுடைய வேலை கிடையாது, நான் செய்ய மாட்டேன். உங்களால் செய்ய முடிந்ததை செய்துக்கோங்க என ஷாக் கொடுக்கிறாள். 

ஏற்கனவே அபிராமி PA பெயர் தீபா என்பதை கேட்டு டென்ஷனிலும் சந்தேகத்திலும் இருக்கும் சமயத்தில் சினேகா உள்ளே வந்து தீபா காபி கொடுக்க முடியாதுனு சொல்லிட்டா என்று சொல்லி ஏற்றி விட யார் அவ? அவளை பார்க்கணும் என தேடி செல்ல தீபா ஒரு screen பின்னாடி ஒளிந்து கொள்கிறாள். 

தீபாவை நெருங்கி செல்லும் வேளையில் கார்த்திக் வந்து விட அபிராமி அவனிடம் பேசுகிறாள். ஸ்நேகாவிடம் காபி கொடுத்தீர்களா என்று கேட்க தீபா கொடுக்க முடியாதுனு சொன்ன விஷயத்தை கொளுத்தி போடுகிறாள். திரும்பவும் கார்த்திக் ஒரு மீட்டிங் என கிளம்பி விட அபிராமியும் வீட்டிற்கு கிளம்பி விடுகிறாள். 

அதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த தீபா மீனாட்சியிடம் நடந்த விஷயங்களை சொல்ல இதையெல்லாம் என்னால் நம்பவே முடியல, நீ வேலைக்கு போற விஷயம் மட்டும் தெரிந்தால் அவ்வளவு தான் என பேசி கொண்டிருக்க அங்கு வரும் கார்த்திக் நாளைக்கு நான் டெல்லி போறேன் என்று சொல்கிறான். மறுபக்கம் அபிராமி சாமியாரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்க அருணாச்சலம் அதெல்லாம் வந்துடுவார் என சொல்ல சாமியாரும் வந்து விடுகிறார். 

அவர் கார்த்திகை தீபத்திற்கு விளக்கு போட நேரம் குறித்து விட்டு செல்ல அபிராமி ஐஸ்வர்யா மற்றும் மீனாட்சியிடம் நாளைக்கு அவர் சொன்ன நேரத்தில் மூன்று பேரும் இங்கே இருக்கனும் என சொல்ல மீனாட்சி அந்த விஷயத்தை தீபாவிடம் சொல்கிறாள். தீபா லீவ் சொல்லி விட்டு வருவதாக கூறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திக்காய் தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | ஒய்வூதியம் பெறுவோர் ஹை அலர்ட்! நாளை கடைசி தேதி.. உடனே இதை செய்துவிடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News