டி20 உலக கோப்பை ; விராட் கோலி ஒரு பாகுபலி.. தப்பு கணக்கு போடாதீங்க - எச்சரிக்கும் வாசிம் ஜாபர்

Wasim Jaffer defends Virat Kohli : விராட் கோலி ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடவில்லை என்பதற்காக அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் எச்சரித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 14, 2024, 02:03 PM IST
  • விராட் கோலி மீது எழுந்த விமர்சனம்
  • விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த வாசிம்
  • நிச்சயம் அவர் சிறப்பாக ஆடுவார் என நம்பிக்கை
டி20 உலக  கோப்பை ; விராட் கோலி ஒரு பாகுபலி.. தப்பு கணக்கு போடாதீங்க - எச்சரிக்கும் வாசிம் ஜாபர் title=

விராட் கோலி டி20 உலக கோப்பை தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் சிறப்பாக ஆடவில்லை என்பதால் அவர் மீது விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடி ஆரஞ்சு தொப்பியை எல்லாம் வென்ற அவர், இந்திய அணிக்காக அதுவும் உலக கோப்பையில் 1, 4, 0 என ரன்கள் எடுப்பது எந்தவகையில் நியாயம் என விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. இந்திய அணி டி20 உலக கோப்பையில் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் விராட் கோலியின் பங்களிப்பு சுத்தமாக இல்லை. 11  பேர் கொண்ட அணியாக இருந்தாலும், 10 பேர் கொண்ட அணியாகவே விளையாடி இந்த போட்டிகளில் வென்றிருக்கிறார்கள். அதனால் விராட்  கோலி ஓப்பனிங் இறங்குவதற்கு பதிலாக, வழக்கம்போல் நம்பர் 3 ஸ்லாட்டில் விளையாட வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் எல்லாம் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | USA vs IND: இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 அமெரிக்க வீரர்கள்...!

இதற்கு வாசிம் ஜாபர் பதிலடி கொடுத்துள்ளார்.  விராட் கோலியின் பார்ம் குறித்து விமர்சிப்பவர்களுக்கு அவர் கொடுத்திருக்கும் பதிலில், விராட் எப்படியான பிளேயர் என எல்லோருக்கும் தெரியும். அதனால் ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடவில்லை என்பதற்காக எல்லாம் அவரை விமர்சிப்பத்தில் நியாயமில்லை. இந்திய அணிக்காக பல போட்டிகளை தனி  ஒருவராக களத்தில் நின்று வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த கடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை, விராட் கோலியை விமர்சிப்பர்கள் மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்.

அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்தபோது, யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் ஹரீஸ் ராப் ஓவரில் சிக்சர்களை அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தவர் அவர். இந்திய அணிக்கு தேவைப்படும் நேரத்தில் சரியான ஆட்டத்தை விராட் கோலி கொடுப்பார். மிகப்பெரிய போட்டிகளின் போதெல்லாம் விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாகவே இருந்திருக்கிறது என்பதால், டி20 உலக கோப்பை குரூப் 8 சுற்றிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." என்று வாசிம் ஜாபர் புகழாரம் சூட்டியிருக்கிறார். அதாவது, விராட் கோலியை ஒரு பாகுபலி ரேஞ்சுக்கு பெருமையாக பேசியிருக்கிறார்.

டி20 உலக கோப்பை தொடரைப் பொறுத்தவரை இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று குரூப் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. லீக் போட்டியில் அடுத்ததாக கனடா அணியுடன் மோத இருக்கிறது. 

மேலும் படிக்க | டி20 உலக கோப்பை : சூப்பர்8 சுற்றில் இந்திய அணிக்காகவே வரும் 2 டம்மி டீம்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News