RRR படத்தையே ஓரங்கட்டிய KGF-2: யப்பா... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

வருகிற 14ஆம் தேதி வெளியாகவுள்ள நடிகர் யஷ்ஷின் கே.ஜி.எஃப்- 2 திரைப்படம் ப்ரீ-புக்கிங்கில் சாதனை படைத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 9, 2022, 03:05 PM IST
  • கே.ஜி.எஃப்- 2 திரைப்படம் வருகிற 14ஆம் தேதி வெளியாகவுள்ளது
  • பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படம் ப்ரீ-புக்கிங்கில் சாதனை படைத்துள்ளது
  • பான் - இந்தியா ரிலீசாக கேஜிஎஃப்-2 படம் வெளியாகவுள்ளது
RRR படத்தையே ஓரங்கட்டிய KGF-2: யப்பா... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! title=

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கேஜிஎஃப்-2 திரைப்படம் வருகிற 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. யஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம் பான் இந்தியா ரிலீஸாக வெளியாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங்கில் இப்படம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி படங்கள் அடைந்த பிரமாண்ட வெற்றிக்குப் பின்னர் இந்தப்படத்தை ராஜமெளலி இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் சாதனையைத்தான் கேஜிஎஃப்-2 படம் தற்போது முறியடித்துள்ளது. அதாவது, ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ரிலீசுக்கு முந்தைய ஒட்டுமொத்த அட்வான்ஸ் புக்கிங் விற்பனையை கேஜிஎஃப்-2 திரைப்படம் வெறும் இரண்டே நாட்களில் முறியடித்துள்ளதாம்.

                                                 kgf

மேலும் படிக்க | Beast Vs KGF2: ரிலீசுக்கு முன்பே ‘கே.ஜி.எஃப்-2’வை வென்ற பீஸ்ட்!

தமிழ், மலையாளம் மட்டுமல்லாது இந்தியிலும் கேஜிஎஃப்-2  படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவுவதால் இந்தச் சாதனை நிகழ்ந்துள்ளதாம். சமீபத்தில் தெலுங்கு சினிமாவை இந்தியாவே திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் என ராஜமெளலியைச் சொல்லலாம். அதேபோல, கன்னட சினிமாவைக் குறிப்பிடுவதானால் ‘கேஜிஎஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீலைச் சொல்லலாம். இந்த நிலையில், ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தையும் தாண்டி பிரசாந்த் நீலின் ‘கேஜிஎஃப்-2’ அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை படைத்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இதனிடையே கே.ஜி.எஃப் படத்தின் 3ஆவது பாகமும் உருவாகவுள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பீஸ்ட்'டுக்கு முன்பாக திடீரென வெளியான KGF:  ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News