’ஹிந்தி கற்றுக்கொண்டேன்’ பாலிவுட் என்டிரிக்கு தயார் - கேஜிஎப் ஹீரோ

ஹிந்தி கற்றுக்கொண்டதால்,  பாலிவுட் படங்களில் நடிக்க தயாராக இருப்பதாக கேஜிஎப் ஸ்டார் யாஷ் தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 3, 2022, 10:06 AM IST
  • ஹிந்தி கற்றுக் கொண்டிருப்பதாக யாஷ் தகவல்
  • பாலிவுட் என்டிரிக்கு ரெடி
  • எல்லா பெரிய விஷயங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும்
’ஹிந்தி கற்றுக்கொண்டேன்’ பாலிவுட் என்டிரிக்கு தயார் - கேஜிஎப் ஹீரோ title=

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் கேஜிஎப் 1. கன்னடத்தில் ரிலீஸான படம் பின்னர் அனைத்து மொழிகளிலும் ரிலீஸ் செய்யபட்டது. ஆக்ஷன் காட்சிகளில் பிரம்மிக்க வைத்த அந்த திரைப்படம் வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது. இதில் ஹீரோவாக நடித்த யாஷ், பான் இந்தியா ஸ்டாராக மாறினார். இப்படத்தின் தொடர்ச்சியாக கேஜிஎப் 2 தற்போது உருவாகியிருக்கிறது. கடந்த ஆண்டே ரிலீஸூக்கு தயாரான இப்படம், கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு, ஏப்ரல் 14 ஆம் தேதி பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது.

மேலும் படிக்க | பீஸ்ட் படத்தில் உள்ள 3 படங்களின் பாதிப்புகள்: யோகி பாபு படத்தின் காப்பியா?

ஏற்கனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் அண்மையில் வெளியான கேஜிஎப் 2-ன் டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. யூடியூப்பில் வெளியிடப்பட்ட கேஜிஎப்2 டீசர் 24 மணி நேரத்துக்குள்ளாக 109 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று, இதுவரை எந்தவொரு திரைப்படத்துக்கும் கிடைக்காத சாதனையை நிகழ்த்தியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் யாஷ், கேஜிஎப் 2 புரோமோஷன் பணிகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். பிரசாந்த் நீல் இயக்கியிருக்கும் இப்படம் கேஜிஎப் முதல் பாகத்தை விட பிரம்மாண்டங்கள் நிறைந்ததாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள யாஷ், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் எனத் தெரிவித்துள்ளார். 

யாஷ் என்ற பெயரை மறந்து மக்கள் தன்னை ‘ராக்கி’ என்றே அழைப்பதாக தெரிவிக்கும் அவர், இந்த படத்திலும் முதல் பாகத்தைபோல் ராக்கிக்கு பல சவால்கள் இருக்கும் எனக் கூறியுள்ளார். "யாஷ் என்ற பெயருக்கு பதிலாக ராக்கி தான் மக்கள் மனதில் இருக்கிறது. அந்தளவுக்கு ராக்கி கதாப்பாத்திரம் மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதல் அத்தியாயத்தை போல் இல்லாமல் கேஜிஎப்2-ல் வரும் கதாப்பாத்திரம் புதியதாக இருக்கும்.  அவருக்கு நிறைய போராட்டங்கள் உண்டு. வாழ்க்கையில் அவருக்கு ஒரு பார்வை இருக்கும் என்பதால் அதை நோக்கி பயணிப்பார்" எனத் தெரிவித்தார். 

தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசிய யாஷ், பல மொழிகளையும் கற்றுக் கொண்டுவருவதாக தெரிவித்தார். ஹிந்தியைப் இப்போது கற்றுக் கொண்டிருப்பதால், பாலிவுட் என்டிரிக்கும் தயார் எனத் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் நடக்கும் எல்லா பெரிய விஷயங்களுக்கும் உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்படி நானும் என்னை அதற்கேற்றவாறு தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். கேஜிஎப் 2 என் வாழ்வில் மிகப்பெரிய படமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | விபத்தில் சிக்கிய ‘உயிரே’ பட நடிகை! மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News