விரைவில் தல அஜித்தின் வலிமை திரைப்படம் ரிலீஸ்; வெளியானது முக்கிய தகவல்

அஜித்தின் வலிமை திரைப்பட அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் தல ரசிகர்ளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 8, 2021, 08:02 AM IST
  • மிக அதிக அளவிலான எதிர்பார்ப்புகளை எற்படுத்தியுள்ள படங்களில் வலிமை படமும் ஒன்றாகும்.
  • நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக அஜித்தை வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார் எச்.வினோத்.
விரைவில் தல அஜித்தின் வலிமை திரைப்படம் ரிலீஸ்; வெளியானது முக்கிய தகவல் title=

சென்னை: இயக்குநர் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் தல அஜித். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வரும் இந்தத் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆணடிலேயே தொடங்கப்பட்டது.  

கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை (Valimai) திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கிய நிலையில் வலிமை திரைப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை என அஜித் ரசிகர்களின் தங்கள் அபிமான நடிகர் தல அஜித் வலிமை திரைப்பட அப்டேட் வேண்டுமென அடம் பிடித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அப்டேட் கிடைத்துள்ளது.

சமீப காலங்களில் மிக அதிக அளவிலான எதிர்பார்ப்புகளை எற்படுத்தியுள்ள படங்களில் வலிமை படமும் ஒன்றாகும்.  நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக அஜித்தை வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார் எச்.வினோத். 

அஜித் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அதன் பரஸ்ட் லுக் வெளியாகும் முன்பே பிரமாண்ட தொகைக்கு விற்பனையான வலிமை படம் விற்பனையாகியுள்ளதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தின் உள்நாடு வெளிநாடு திரையரங்க உரிமை, OTT உரிமை என அனைத்தும் மிக பிரமாண்ட விலைக்கு விற்று தீர்ந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வலிமை (Valimai) திரைப்படத்தில் அஜித்துடன் (Ajith), கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு இரணடாவது முறையாக அஜித்தை வைத்து வலிமை திரைப்படத்தை (Boney Kapoor) தயாரித்துள்ளார். 

ALSO READ | Valimai Update: தல அஜித் ரசிகர்களுக்கு விரைவில் இரட்டை மகிழ்ச்சி, மாஸ் அப்டேட் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News