கோயம்புத்துரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி, மக்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர், தேனிசை தென்றல் தேவாவின் இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. ALVI Digitech மற்றும் Giant Films நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றில் பல ப்ளாக்பஸ்டர் இசை ஆல்பங்களை வழங்கி, கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர் “தேனிசை தென்றல் “ தேவா. கானா என்றாலே தேவா எனும் பெயர் மட்டுமே நினைவுக்கு வரும், அந்தளவிற்கு தமிழ் சினிமா இசையில் எளியோர்களின் இசையை கேட்கச் செய்த ஆளுமையாளர். மெல்லிசையிலும் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதை நிரூபித்து, இன்னிசைத்தென்றல் எனப் பெயரெடுத்தவர்.
பல கோடி ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சியை தமிழகமெங்கும் துவங்கியிருக்கிறார் தேனிசைத் தென்றல் தேவா. சென்னை, பாண்டிச்சேரியில் வெற்றிகரகமாக இசை நிகழ்ச்சியை முடித்த நிலையில், அடுத்ததாக கோயம்புத்தூரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.
ALVI Digitech மற்றும் Giant Films நிறுவனங்கள் இணைந்து இந்த இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளன. இந்த இசை நிகழ்ச்சியில் திரை இசை பிரபலங்கள் சபேஷ் முரளி, அனுராதா ஶ்ரீராம், SPB சரண், உண்ணி மேனன், மற்றுன் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்கள் உட்பட பல பிரபல இசை கலைஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
தேனிசைத் தென்றல் தேவாவின் ரசிகர்களுக்கு, இனிப்பான செய்தியாக வந்துள்ள இந்த இசை நிகழ்ச்சி, இப்போதே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது. இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து வயதிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. இன்றும் சமூக வலைதளங்களான யூடுயூப், இன்ஸ்டா,
ஸ்பாட்டிஃபை என அனைத்து தளங்களில் அவரது பாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இசை நிகழ்ச்சி இப்பொழுதே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. கோயம்புத்துரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் மற்றும் நிகழ்ச்சி குறித்தான விவரங்கள், பிப்ரவரி மாத இறுதியில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மூன்று கர்ப்பிணிகளுக்கு சீமந்தம்! மாரியை மகளாக ஏற்று கொள்வாரா பார்வதி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ