மாஸ் வசூல் வேட்டை நடத்தும் மகாராஜா.. ஆடிப்போன பாக்ஸ் ஆபீஸ்

Maharaja Movie Box Ofiice Collections : கடந்த ஜூன் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியான மகாராஜா திரைப்படம் தற்போது வரை வசூல் ரீதியாக சக்கை போடு போட்டு வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 24, 2024, 06:35 PM IST
  • பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனை ஆட வைத்த மகாராஜா.
  • மகாராஜா ஓடிடி வெளியீடு எப்போது?
  • உலகளவில் ரூ. 81.8 கோடிக்கும் மேல் வசூல்.
மாஸ் வசூல் வேட்டை நடத்தும் மகாராஜா.. ஆடிப்போன பாக்ஸ் ஆபீஸ் title=

Maharaja Movie Box Ofiice Collections : தமிழ் திரையுலகில் கால் பாதித்த போதிலிருந்து தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானவர், நடிகர் விஜய் சேதுபதி. தற்போது இவரது நடிப்பில் வெளியாகியுள்ள மகாராஜா திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.

மகாராஜா திரைப்படம்:
குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் மகாராஜா (Maharaja) திரைப் படத்தை இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் மகாராஜா படத்தில், விஜய் சேதுபதி (Vijay Sethupathi) கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அவருடன் இந்த படத்தில் மமதா மோகன்தாஸ், நட்டி என்கிற நட்ராஜ், அபிராமி, திவ்ய பாரதி, பாரதிராஜா, முனிஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு வில்லனாக அறிமுகமான அனுராக் காஷ்யப் இந்த படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படம் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும்.

மேலும் படிக்க | Latest News Jayam Ravi Aarti Ravi Divorce Speculations : நடிகர் ஜெயம் ரவிக்கு விவாகரத்தா? புகைப்படங்களை நீக்கிய மனைவி..என்ன ஆச்சு?

இந்த படம் வெளியான முதல் தற்போது வரை மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று வருகிறது. அதேபோல் படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலர் இந்த படத்தை ஆஹா.. ஓஹோ என்று பாராட்டி வருகின்றனர். குறிப்பா படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி மற்றும் அவரது மகளாக நடித்தவர் அழ வைத்துள்ளார், அதேபோல் வில்லனாக நடித்துள்ள அனுராக் காஷ்யப்பும் இதுவரை நடித்தாத அளவிற்கு இந்த படத்தில் நடித்துள்ளார் என்று மக்கள் கனத்த இதயங்களுடன் தியேட்டரில் இருந்து வெளியேறும் போது தங்களின் கருத்தை தெரிவித்தனர்.

மகாராஜா படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்: 
இதனிடையே முதல் நாள் முதலே படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்புக்கு மத்தியல் மகாராஜா திரைப்படம் இந்தியா அளவில் முதல் நாளில் 5 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தியிருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் உலகம் முழுவதிலும் மொத்தமாக மகாராஜா திரைப்படம் 7 கோடி ரூபாய் வசூல் செய்திருந்ததாக கூறப்படுறது. அதேபோல இரண்டாம் நாளில் மகாராஜா திரைப்படம் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது. மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ள இப்படம் மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது.

பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனை ஆட வைத்த மகாராஜா:
இந்நிலையில் தற்போது படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில், இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 81.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. வரும் நாட்களில் இந்த படம் கட்டாயம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை அடிக்கும் என்று கூறப்படுகிறது.

மகாராஜா ஓடிடி வெளியீடு எப்போது?
இதனிடையே மகாராஜா ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், இந்த படம் ஜூலை இரண்டாம் வாரத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | Actor Legend Saravanan Net Worth: தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு.. கோடிகளுக்கு அதிபதியா லெஜண்ட் சரவணன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News