நடிகர் ஜெயம் ரவிக்கு விவாகரத்தா? புகைப்படங்களை நீக்கிய மனைவி..என்ன ஆச்சு?

Latest Nes Jayam Ravi Aarti Ravi Divorce Speculations : நடிகர் ஜெயம் ரவியும், அவரது மனைவி ஆர்த்தியும் விவாகரத்து செய்ய உள்ளதாக இணையதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Jun 24, 2024, 05:48 PM IST
  • ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து?
  • புகைப்படங்களை நீக்கிய மனைவி!
  • ரசிகர்கள் வருத்தம்...
நடிகர் ஜெயம் ரவிக்கு விவாகரத்தா? புகைப்படங்களை நீக்கிய மனைவி..என்ன ஆச்சு?  title=

Latest Nes Jayam Ravi Aarti Ravi Divorce Speculations : தமிழ் திரையுலகில் ‘சாக்லேட் பாய்’ கதாநாயகனாக வலம் வருபவர், ஜெயம் ரவி. பிரபல படத்தொகுப்பாளர் எடிட்டர் மோகனின் மகனான இவர் ‘ஜெயம்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். சொல்லப்போனால் இந்த படத்தை இயக்கியதே அவரது அண்ணன் மோகன் ராஜாதான். இந்த படம், இருவருக்குமே நல்ல தொடக்கத்தை கொடுக்க, தற்போது அண்ணனும்-தம்பியும் திரையுலகில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். 

ஜெயம் ரவிக்கு தொடர் சறுக்கல்…

நடிகர் ஜெயம் ரவி, திறமையான நடிகராக இருந்தாலும், கடந்த சில வருடங்களாக கதைகளை சரியாக தேர்ந்தெடுக்காததால் தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வருகிறார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு, இவருக்கு எந்த படமும் சரியாக அமையவில்லை என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும், மக்கள் மனத்தில் நல்ல ஹீரோ என்ற பெயரை பெற்றிருக்கிறார். 

மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் அருள்மொழி வர்மன் கதாப்பாத்திரத்தில் நடித்த இவர், தனது நடிப்பிற்காக நல்ல வரவேற்பினை பெற்றார். ஆனால், தனியாக ஹீரோவாக நடித்திருந்த அகிலன், இறைவன் ஆகிய படங்களும், இந்த ஆண்டு வெளியான சைரன் படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. 

விவாகரத்தா? 

நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி என்பவரை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ‘ஆரவ்’ என்ற மகன் இருக்கிறார். இந்த குழந்தை ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்திருந்தது. இந்த நிலையில், ஆர்த்தியும் ஜெயம் ரவியும் விவாகரத்து பெற இருக்கிறார்களா என்ற சந்தேகம் ரசிகர்கள் பலருக்கு எழுந்திருக்கிறது. இதற்கு காரணம் என்ன தெரியுமா?

மேலும் படிக்க | ஜெயம் ரவி குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்காரா..? அதுவும் இந்த படத்திலா..!

புகைப்படங்கள் நீக்கம்..

பொதுவாக, திரையுலக ஜோடிகள் விவாகரத்திற்கு முன்னர் பிரிந்து வாழ்கிறார்கள் என்றால், சமூக வலைதளங்களில் இருந்து முதலில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தூக்கி விடுவர். சமந்தா-நாக சைதன்யா முதல், தனுஷ்-ஐஸ்வர்யா வரை பலர் இப்படித்தான் செய்தனர். அதே போல, தற்போது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கியிருக்கிறார். இது, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இறுப்பினும், தனது பயோவில் இருக்கும் கணவரின் ஐடியை அவர் தூக்கவில்லை. அது மட்டுமன்றி, இன்ஸ்டாகிராம் மற்றும் இதர சமூக வலைதளங்களில் இவரது பெயர் இன்னும் ‘ஆர்த்தி ரவி’ என்றே இருக்கிறது. அதனால், ரசிகர்கள் அனைவரும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். காரணம், கடந்த சில மாதங்களாகவே கோலிவுட்டில் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த ஜோடிகள் விவாகரத்து பெற்று வருகின்றனர். இந்த லிஸ்டில் ஜெயம் ரவியும் இணைந்து விடிவாரோ என்ற பயம் ரசிகர்களிடையே இருக்கிறது. 

ஜெயம் ரவி-ஆர்த்தி காதல்..

சைரன் திரைப்படத்தை, ஜெயம் ரவியின் மாமியார் தயாரித்து வழங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமா, அப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஆர்த்தியும் ஜெயம் ரவியும் ஒன்றாக கலந்து கொண்டனர். அப்போது தனது மனைவியை அவர் ‘செல்லம்’ என்று கூறியதும், கொஞ்சி கொஞ்சி பேசியதும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு விவாகரத்து என்று அறிவிப்பு வந்தால், பல ரசிகர்களின் இதயங்கள் நொறுங்கப்போவது உறுதி. 

மேலும் படிக்க | Jayam Ravi: நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவா? ஜெயம் ரவி பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News